தீபாவளி சிறப்பு உணவுகள்

தீபாவளி அன்று பல்வேறு வகையான உணவுகளை நாம் வீட்டில் செய்வது வழக்கம்.  அதே போல கடைகளிலும் பல ஸ்வீட்ஸ் வாங்குகின்றோம். தீபாவளி என்றால் எல்லோராலும் சொல்லப்படுவது பண்டிகைகளின் ராணி என்று தான். தீபாவளி தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்பே நமது வீடுகளில் கொண்டாட்டம் தொடங்கிவிடும்.

தீபாவளி அன்று எண்ணை தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து தெய்வங்களை வணங்கி பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவார்கள். அதிலும் விதவிதமான உணவுகளை சாப்பிட்டும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

தீபாவளி அன்று முறுக்கு, வடை, காராபூந்தி, இனிப்பு சீடை, பால் ஸ்வீட்ஸ், தேங்காய் லட்டு, மைசூர்பாகு போன்ற பல வகையான உணவு வகைகள் இடம் பெருகின்றன. இதில் பல வகைகள் நமது வீட்டில் செய்யக்கூடிய பலகார வகைகளும் இருகின்றனர்.

தீபாவளி அன்று பலகாரங்களை தனது அருகில் இருக்கும் வீட்டிற்கும் கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கின்றனர். இந்த நாட்களில் வீட்டில் பல வகையான உணவு வகைகள் இடம் பெறுகிறது. இந்த தீபாவளி திருநாளின் பொழுது இல்லத்தில் ஒளி நிறைந்து இருப்பதுபோல உள்ளத்திலும் உணவு வகைகளை உண்டு சந்தோஷம் நிறையும் என்றும் கூறப்படுகிறது.

Published by
Staff

Recent Posts