தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். நரகாசுரன் என்ற அசுரனை மகாவிஷ்ணு போரில் அழித்தார். நரகாசுரன் விருப்பத்தின்படி அவனின் இறந்த நாளை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாடத் தொடங்கினர். அந்நாள் தீபாவளி ஆகும்,.

தீபாவளிக்கு இனிப்பு, பலகாரங்கள், புத்தாடை, பட்டாசு போன்றவற்றினை வாங்கியும் வீட்டிலேயே பலகாரங்கள் செய்தும் கொண்டாடுவது வழக்கமாகும்.


தீபாவளி அன்று காலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்வது நமது பாரம்பரியமாகும். அதாவது தீமை விலகுவதாக கருதி எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கத்தில் உள்ளது.

பின்பு புத்தாடைகளை அணிந்து வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதம் வாங்கும் வழக்கமும் இன்றும் நடைமுறையில் உள்ளது.

வீட்டில் செய்த பலகாரங்களை கடவுளுக்கு படைத்து பின்னர் அனைவரும் உண்டு மகிழ்வார்கள். அதுமட்டுமின்றி தீபாவளி அன்று அசைவ சாப்பாடுடன் அனைத்து வீடுகளிலும் விருந்து நடைபெறும்.

தீபாவளியின் முக்கியமான நிகழ்வே பட்டாசுகள் வெடிப்பதாகும். தீபாவளியின் சிறப்பம்சமே பட்டாசுகள், வேட்டு, மத்தாப்பு, தரைசக்கரம், கலர் வேட்டுகள் போன்றவற்றினால் கலைக்கட்டும்.

Published by
Staff

Recent Posts