நவராத்திரி ஸ்பெஷல்- மன நோய் தீர்க்கும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். மனித வாழ்வில் மனிதர்களை போலவே மற்ற உயிர்களும் மதிக்கத்தக்கவை என வாழ்வில் உணர்த்தும் ஸ்தலம் இது.


ஒரு காலத்தில் கண்ணப்பன் என்ற வேடன் இங்கு வசித்து வந்தான் அவனுக்கு மனைவி இல்லை மகள் பவளம் மட்டுமே உடன் இருந்தாள். கண்ணப்பன் அங்கிருந்த வன தேவதை ஒன்றின் மேல் பக்தி கொண்டிருந்தான்.

பக்கத்து ஊர்களில் திரியும் கால் நடைகளை தெரியாமல் திருடி வனதேவதைக்கு பலி கொடுத்தும் வந்தான் அப்படி ஒரு நாள் எதுவும் கிடைக்காமல் தான் வளர்த்து வந்த மாட்டை பலி கொடுக்க முன் வந்து மாட்டை அவிழ்க்க முற்பட்டான். தாயின் பிரிவை தாங்க முடியாது இளங்கன்று கதறியது.

இதை பார்த்த வேடனின் மகள் பவளம் கதறி அழுதாள். எப்படியாவது அந்த மாட்டை விட்டு விடுங்கள் தந்தையே என கதறினாள் என்னைப்போல தாயில்லா பிள்ளையாக அந்த பசு மாற வேண்டுமா என கேட்டாள்.

இதனால் மனம் மாறிய வேடன் அன்றிலிருந்து உயிர்ப்பலி கொடுப்பதை நிறுத்தி விட்டான்.

அன்றிலிருந்து இறைச்சி தவிர்த்து வாழத் தொடங்கினான் வேடன். சில நாள்கள் சென்றதும், அவனுடைய மகளும் இறந்து போனாள்.

ஒருநாள் தூங்கும்போது வேடன் கண்ணப்பனுக்கு கனவில் ஒருகாட்சி தோன்றியது. லோக மாதா ஜகதாம்பாள் கனவில் தோன்றி, ‘கண்ணப்பா, நீ கொடுத்து வைத்தவன். உன் மகளின் நேசத்துக்குரிய பசு வேறு யாருமல்ல சாட்சாத் மகாலட்சுமிதான் என்பதை அறிந்துகொள்’ எனக்கூறி மறைந்தாள்.

படுக்கையிலிருந்து எழுந்து தொழுவத்தைப் பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான். அங்கே பசுவும் கன்றும் சிலைகளாக மாறியிருந்தன. பின்பு அந்த இடத்தில் அவன் ஒரு சிலை எழுப்பி வழிபாடு நடத்த காலப்போக்கில் அங்கு புதர்கள் மண்டி அடர்ந்த வனமானது.

பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் கிராமத்துப் பெண்னொருத்தி புல் அறுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ரத்தம் பீறிட்டது. அவள் அலறியடித்துக்கொண்டு நடந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொல்ல அவர்கள் அதைஅவர்கள் நம்புதிரி ஒருவரிடம் சொல்ல , அவர் வந்து பார்த்துவிட்டு, ‘இந்த இடம் முழுவதுமே தேவியின் அருள் பெற்ற இடம். இங்கு ஆலயம் அமைத்து வழிபடவேண்டும் என்று ஆலயம் அமைத்து வழிபாடு நடைபெறுகிறது.

இந்த கோவிலில் அந்த பராசக்தி தேவி லட்சுமி சரஸ்வதி துர்க்கை எனும் நிலைகளில் அருள் புரிவதால் இவளை வணங்கி வழிபடுவதால் மனக்குழப்பம் நீங்கி வாழ்வில் சகல சம்பத்துகளும் கிடைக்கும் என நம்பிக்கை.

இவள்தான் சோட்டானிக்கரை பகவதி அம்மன்.

இங்கு மன நிலை பாதித்தோர் செய்வினை, பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டோரும் வழிபடுகின்றனர்.

நவராத்திரி விழா இங்கு சிறப்பான முறையில் நடக்கிறது குறிப்பிடத்தக்கது.

Published by
Staff

Recent Posts