சியான் 62 பட ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் நாளை வெளியாகிறது!.. விக்ரம் திடீர்னு போட்ட செம ட்வீட்!..

என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் விக்ரம். நாளை நடிகர் விக்ரம் தனது 58-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சியான் 62 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பை வெளியிட போவதாக தற்போது அறிவித்துள்ளார்.

சியான் 62 ஃபர்ஸ்ட் லுக் நாளை:

“ தம்பி உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா” என அவர் ட்வீட் போட்டு சியான் 62 படத்தின் அப்டேட் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது என போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்து வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் தான் திருத்தணி பேக் டிராபில் சியான் விக்ரம், எஸ் ஜே சூர்யாவை வைத்து தரமான சம்பவத்தை செய்து வருகிறார்.

இந்தப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள துஷாரா விஜயன் ஜோடியாக நடித்து வருகிறார்.

விக்ரம் பிறந்தநாள்:

என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமான விக்ரம் தந்து விட்டேன் என்னை, காவல் கீதம், மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், கண்களின் வார்த்தைகள், ஹவுஸ்ஃபுல் என தமிழில் பல படங்களிலும் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சில படங்களும் நடித்ததன் பிறகுதான் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஒரு சினிமாவுக்கு வந்து 9 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சேது படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தார்.

சேது படம் தந்த வெற்றியின் காரணமாக சியான் விக்ரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் விக்ரம் தில், காசி, ஜெமினி, தூள், பிதாமகன், அருள். அந்நியன். பீமா. கந்தசாமி. ராவணன். தெய்வத்திருமகள் என வரிசையாக நல்ல படங்களை கொடுத்து வெற்றியையும் பெற்றார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான ஷங்கர் மற்றும் மணிரத்னத்தின் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார் சியான் விக்ரம். ராவணன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் ஆதித்த கரிகாலன் ஆக லீடு ரோலில் நடித்து அசத்தினார்.

தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள நிலையில் சியான் 62 படத்துக்கு என்ன டைட்டில் வைத்திருக்கிறார்களோ என்கிற ஆவலை தற்போது விக்ரம் வெளியிட்டுள்ள பதிவு தூண்டி இருக்கிறது.

கமல்ஹாசனை தாண்டி தமிழ் சினிமாவில் ரிஸ்க் எடுத்து நடிக்கக்கூடிய நடிகர்கள் யாரும் வரமாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் சியான் விக்ரம் நான் இருக்கிறேன் என உடலை வருத்தி நடிப்பது, விதவிதமான வேடங்களை கச்சிதமாக போட்டு நடிப்பது என கலக்கி வருகிறார்.

சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...