கார்த்திகா நாயருக்கு கல்யாணம் ஆகிடுச்சு!.. நடிகை ராதாவுக்காக குவிந்த 80ஸ் நட்சத்திரங்கள்!

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் திருமணம் இன்று கேரளாவில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்தியுடன் அறிமுகமானவர் ராதா. அவருக்கு முன்பாகவே அக்கா அம்பிகா தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்த நிலையில், ராதாவும் ஹீரோயினாக அறிமுகமாக முதல் படத்திலேயே தனது முத்திரை நடிப்பை வெளிப்படுத்தினார்.

F SytkebwAAgg4T

ராதா மகள் கார்த்திகா நாயர் திருமணம்

அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். கமல்ஹாசன் உடன் ஜோடியாக அக்கா அம்பிகாவும், தங்கை ராதாவும் காதல் பரிசு படத்தில் நடித்திருப்பார்கள்.

மெல்ல திறந்தது கதவு படத்தை எல்லாம் ராதாவுக்காக எத்தனையோ முறை ரசிகர்கள் கண்டு ரசித்து இருப்பார்கள். சிவாஜி கணேசன் உடன் ராதா முதல் மரியாதை படத்தில் “ராசாவே வருத்தமா.. ஆகாயம் சுருங்குமா” என பாடல் வரும் இடங்களில் அவரது எக்ஸ்பிரஷனே போதும் ஜாக்கெட் அணியாமல் சேலையை கட்டிக் கொண்டு அப்போதே படு போல்டாக நடித்து பலரையும் மிரட்டி எடுத்தவர் நடிகை ராதா.

அவரது மூத்த மகளான கார்திகா நாயர் சினிமாவில் செம என்ட்ரியை கோ படத்தில் கொடுத்த நிலையில், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

அதன் பின்னர், அம்மாவை போல சரியாக நடிக்க வராத நிலையில், பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், ரோகித் மேனன் என்பவருடன் இன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

F TFkv bwAANR b

80ஸ் நடிகர்கள் அணிவகுப்பு

நடிகை ராதாவின் மகள் திருமணத்தில் 80களில் பிரபலமாக இருந்த பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டது போல தெரியவில்லை. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் பாக்கியராஜ், நடிகைகள் அம்பிகா, ரேவதி, பூர்ணிமா, மேனகா, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல நடிகைகளும் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பட்டுப் புடவையில் நகைகளை அணிந்து கொண்டு மணமகளாக கார்த்திகா நாயர் மணமேடையை அலங்கரிக்க பட்டு வேட்டி சட்டையில் மணமகன் ரோகித் மேனனும் சிரித்த முகத்துடன் அனைத்து பிரபலங்களையும் வரவேற்றும் தனது இணையை கரம் பிடித்தும் கலக்கினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...