சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் மனிதனுக்குமான ஒற்றுமைகள்..



கோவிலுக்கும் மனிதனுக்குமான ஒற்றுமைகள் அதிகம். மனித உடல் அமைப்பில்தான்  கோவில் இருக்கும். எல்லா கோவில்களையும்விட சிதம்பரம் நடராஜர் சன்னிதிக்கும் மனிதனின் உருவ அமைப்பிற்கும்,  நிறைய ஒற்றுமை இருக்கிறது. நடராஜர் சன்னிதியின் கருவறை கூரை பொன்னால் ஆனதுன்னு எல்லாருக்குமே தெரியும். அந்த பொன் கூரையில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையை அளவில் உள்ளது. பொன் கூரையில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளின் எண்ணிக்கையை ஒத்தது.

கோவிலில் உள்ள 9 வாசல்கள், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும்,  ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும். இது மனித உடலுக்கும், அவர்தம் வாழ்க்கைமுறைக்கும் ஒத்துப்போவது ஆச்சரியமே! 

 

ஓம் நமச்சிவாய!!

Published by
Staff

Recent Posts