ஆடாமல் ஜெயித்த தமிழக வீராங்கனை.!! செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மூன்றாவது வெற்றி.!!!

சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் உலகில் உள்ள பல நாட்டு செஸ் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் நேற்றைய முன் தினம் மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இந்திய வீரர்கள் பலரும் வெளிநாட்டு வீரர்களை வரிசையாக தோற்கடித்துக் கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக தமிழக வீரர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுகிறது. இந்த நிலையில் இந்திய வீராங்கனை தனது மூன்றாவது வெற்றியினை ஒலிம்பியாட் போட்டியில் பெற்றுள்ளார்.

அதன்படி மாமல்லபுரம் போட்டியில் இந்திய மகளிர் சி அணி வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். ஆஸ்திரியா அணி வீராங்கனை போல்டேரியர் பங்கேற்காததால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா முதல் முறையாக போட்டியில் பங்கேற்று மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.