டாஸ் வென்ற தோனி பெளலிங் தேர்வு.. சுப்மன் கில் இருக்கும்போது தவறான முடிவா?

இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியின் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் தல தோனி டாஸ் வென்றார். உடனே அவர் யோசிக்காமல் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் பேட்டிங் செய்யும் குஜராத் அணியின் சுப்மன் கில்லின் அபார பேட்டிங் காரணமாக மிகப்பெரிய ஸ்கோரை குவித்து விடும் என்றும் எதிர் அணிகளுக்கு மிகப்பெரிய இலக்கை ஏற்படுத்திவிடும் என்பது தெரிந்ததே. கடந்த சில போட்டிகளில் சுப்மன் கில் அபார பேட்டிங் காரணமாக முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி வெற்றி பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஆனால் அதையெல்லாம் தெரிந்தும் தல தோனி எதற்காக முதலில் பந்துவீச்சை டாஸ் வென்றும் தேர்வு செய்தார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக போட்டியின் இடையே மழை வந்தால் டக்வொர்த் லீவிஸ் விதிகளின்படி எத்தனை ஓவர்களில் எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என்பது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கு தெரிந்து விடும் என்பதால் அதற்கேற்ற வகையில் பேட்டிங் செய்யலாம்

அதேபோல் நேற்று நல்ல மழை பெய்துள்ள நிலையில் இன்று காலை நல்ல வெயில் அடித்தாலும் இரவு 9 மணிக்கு மேல் பனித்துளி ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அது இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. எனவேதான் முதலில் பேட்டிங் எடுப்பது இரண்டு விதத்தில் சாதகம் என்பதால் தலை தோனி இந்த முடிவை எடுத்து உள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் நான் ஒருவேளை டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் தான் எடுத்திருப்பேன் என்றும் தல தோனி எனது எண்ணத்தை ஈடு செய்து விட்டார் என்றும் அதனால் எனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

மொத்தத்தில் டாஸ் முடிவு இன்று போட்டியில் முக்கிய பங்கை வகிக்கும் என்பதால் தல தோனி எடுத்த முடிவு சரியா தவறா என்பது போக தான் தெரியும். மேலும் சென்னை மற்றும் குஜராத் அணியில் கடந்த பிளே ஆப் போட்டிகளில் விளையாடிய அதே 11 வீரர்கள் தான் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...