திமுக, அதிமுகவுக்கு மாற்று தேவை தான்.. ஆனால் அது விஜய்யும் இல்லை, சீமானும் இல்லை.. கண்டிப்பாக மக்களை காப்பாற்ற ஒரு ஆபத்பாந்தவன் வருவார்.. அதுவரை மக்கள் காத்திருப்பார்கள்.. மக்கள் புரட்சி ஒருநாள் ஏற்படும்.. அப்போது ஊழல்வாதிகள் ஓட ஓட விரட்டப்படுவார்கள்.. அந்த புரட்சியில் ஒரு தலைவன் தோன்றுவான்.. அந்த தலைவன் தான் நாட்டை ஆள்வான்.. சமூக வலைத்தள வைரல் பதிவு..!டிசம்பர் 25, 2025, 14:56
ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்ததற்கும் விஜய்க்கும் வித்தியாசம் உண்டு.. மற்ற நடிகர்களுக்கு Gen Z ஆதரவு இல்லை.. விஜய்க்கு Gen Z இளைஞர்கள் தான் மிகப்பெரிய பலம்.. இளைஞர் கூட்டத்தால் மட்டுமே புரட்சி ஏற்படுத்த முடியும்.. ஜல்லிக்கட்டு போராட்டம் தான் உதாரணம்.. விஜய்யை எல்லோரும் சாதாரணமாக நினைக்கிறார்கள்.. நிச்சயம் தமிழக அரசியல் பாதையே மாறும்..!டிசம்பர் 25, 2025, 07:54
பிரசாந்த் கிஷோர் சொன்னது விஜய்க்கும் பொருந்தும்.. ஒன்று விஜய் ஆட்சியை பிடிப்பார், அல்லது ஜீரோ ஆவார்.. இரண்டில் ஒன்று தான் நடக்கும்.. கிங் மேக்கராக வாய்ப்பு இல்லை… காங்கிரஸ், விசிக விஜய் பக்கம் வந்தால் வெற்றிக்கு வாய்ப்பு.. இல்லையேல் ஜீரோ தான்..பிரபல பத்திரிகையாளர்களின் கணிப்பு..டிசம்பர் 24, 2025, 10:47
தவெக + காங்கிரஸ் கூட்டணியால் இரு கட்சிகளுக்கும் கிடைக்கும் ஜாக்பாட்.. 1967க்கு பின் தமிழகத்தில் ஆட்சி.. இது காங்கிரசுக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு.. கட்சி ஆரம்பித்த இரண்டே வருடத்தில் தமிழகத்தில் ஆட்சி, புதுவை, கேரளாவில் ஆட்சியில் பங்கு.. தவெகவுக்கு கிடைக்க போகும் அற்புதமான வாய்ப்பு.. இந்திய வரலாற்றில் கட்சி ஆரம்பித்த 2 வருடங்களில் 3 மாநிலங்களில் ஆட்சி என்பது இதுவரை இல்லாத சாதனை.. விஜய் சாதிப்பாரா?டிசம்பர் 24, 2025, 07:55
விஜய்யுடன் கூட்டணி.. பிரியங்கா காந்தி போட்ட ஒரே ஒரு நிபந்தனை? நீங்க அதை செய்ய வேண்டாம்.. நாங்க பாத்துக்கிறோம்.. ஓகே சொன்ன விஜய்.. 2 வகையாக பிரிக்கப்படும் தேர்தல் பிரச்சாரம்.. காங்கிரஸ் பிரச்சாரம் வேறு கோணத்தில்.. விஜய் பிரச்சாரம் வேறு கோணத்தில்.. பக்கா பிளான் போடும் பிரியங்கா காந்தி?டிசம்பர் 24, 2025, 07:35
விஜய் அவ்வளவு எளிதில் ஆட்சியை பிடித்துவிட முடியாது.. 2 திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்யுமே தவிர, 3வது நபரை அவ்வளவு எளிதில் உள்ளே விடாது.. தேர்தல் அரசியல் என்பது முற்றிலும் மாறுபட்ட களம்.. இதில் களமாடுவது பெரும் ரிஸ்க்.. இன்னும் அரசியல்வாதியாக மாறாத ரசிகர்களை வைத்து விஜய் என்ன செய்ய போகிறார்? தாக்கு பிடித்து சாதிப்பாரா? தோல்வியுடன் வெளியேறுவாரா?டிசம்பர் 23, 2025, 21:30
SIR பணிகள்.. பாஜக ஆளும் மாநிலங்களை விட சிறப்பாக செய்தது தமிழக அரசு.. குஜராத்தில் 74 லட்சம் தான்.. மேற்கு வங்கத்தில் 58 லட்சம் தான். ஆனால் தமிழக அரசு, அரசு ஊழியர்கள், திமுக உள்ளிட்ட கட்சியினர் ஒத்துழைப்பால் சுமார் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம்.. இது வரவேற்க வேண்டிய விஷயம்.. மத்திய அரசை திமுக எதிர்த்தாலும், SIR விஷயத்தில் நேர்மையாக பணியாற்றிய தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..டிசம்பர் 23, 2025, 11:54
ஒரு புது பிளேயர் களத்துக்கு வரட்டுமே.. 2 கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவது முடிவுக்கு வரட்டும்.. விஜய் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை.. திமுக, அதிமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தொங்கு சட்டமன்றத்தை ஏற்படுத்தினால் மிகப்பெரிய வெற்றி தான்.. 2026 தேர்தலில் ஏதாவது ஒரு திராவிட கட்சியை விஜய் காலி செய்வார்.. யார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.. பொதுமக்கள் கருத்து..!டிசம்பர் 23, 2025, 07:45
சமூக வலைத்தளங்களில் பொங்குபவர்கள் ஓட்டுச்சாவடிக்கே செல்ல மாட்டார்கள்.. சின்சியரா ஓட்டு போடுபவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்.. தேர்தல் நாளை ஒட்டி 2 நாள் லீவு கிடைத்தால் ஊட்டியோ, கொடைக்கானலோ போய்விடுவார்கள்.. இளைஞர்களை ஓட்டு போட வைப்பது தான் விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.. இந்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டால் விஜய் தான் முதல்வர்..!டிசம்பர் 22, 2025, 16:36