ஷூட்டிங் ஸ்பாட்ல் சாப்பிடும் போது விஜயகாந்த் செய்யும் செயல்.. இதுனாலதான் மக்கள் மனசுல குடியிருக்காரு..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக இயற்கையாகவே மக்கள் நேசித்த ஒரு மனிதர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த்தான் என்றால் அது மிகையாகாது. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நிறைய நல்ல குணங்கள் இவரிடமும் இயல்பாகவே குடிகொண்டிருந்தால் மக்கள் இவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்று செல்லப் பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தனர்.

திரையில் நடிப்பவர். ஆனால் நிஜத்தில் நடிக்காதாவர். அவர் மறைந்தாலும் அவரது வள்ளல் தன்மையாலும், நல்ல குணங்களாலும், அவர் விட்டுச் சென்ற பணிகளாலும் இன்னும் நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் மாபெரும் மனிதர். விஜயகாந்தின் இறப்பின் போது அவரைப் பற்றி பதிவு செய்தவர்களில் பெரும்பாலும் அவரின் திரை வாழ்க்கையைப் பற்றிக் கூறவில்லை. மாறாக அவரின் நல்ல குணங்களைத்தான் போற்றினர்.

இந்நிலையில் விஜயகாந்தை வைத்து பொன்மனச் செல்வன், சேதுபதி ஐ.பி.எஸ், போன்ற ஹிட் படங்களை எடுத்த இயக்குநர் பி.வாசு அவரைப் பற்றிக் கூறுகையில், “கேப்டன் விஜயகாந்த் ஷுட்டிங் சமயங்களில் அங்கு உணவு இடைவேளையின் போது பரிமாறப்படும் உணவுகளை இயக்குநர், உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுடன் சேர்ந்து உண்ணமாட்டாராம். மாற்றாக தனக்கு உதவியாளராக இருப்பவர்கள், மேக்கப் மேன், லைட்டிங் பாய், என சினிமாவின் அடிமட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் தான் அவர்களுடைய உணவு இருக்குமாம்.

தயாராகப் போகும் ஜெயிலர் -2.. கசிந்த ரகசிய தகவல்..குஷியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

ஏனெனில் அவருக்கு அதுவே வசதியாக இருந்தது. அவர்களுடனே ஒன்றாக அமர்ந்து உணவருந்திப் பழகியவர். மேலும் தனக்குக் கொடுக்கப்படும் அதே உணவு அவர்களுக்கும் கொடுக்கப்படுகிறதா என்று தெரிந்தும் கொள்வாராம். இப்படி சினிமாவின் அடிமட்டத் தொழிலாளர்களுடனும் இணைந்து பழகி ஏற்றத்தாழ்வு இல்லாமல், தான் ஒரு ஹீரோ என்ற அடையாளமும் இல்லாமல் பழகக்கூடிய மனம் படைத்தவர்தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். “ என்று இயக்குநர் பி.வாசு அவரைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

மேலும் பி.வாசு கேப்டனுக்காக 2000ஆண்டுகளின் பிற்பகுதியில் ஒரு கதை தயார் செய்து வைத்திருந்ததாகவும், இன்றுவரை அந்தக் கதை படமாக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு பிரபலமும் தான் அவருடன் பழகிய, பணியாற்றி நாட்களைக் பற்றிக் கூறும் போது எப்பேர்ப்பட்ட மனிதர் இந்த உலகில் இருந்திருக்கிறார் என்று கேள்விப்படும் போது நம்மை அறியாமலேயே மெய் சிலிர்க்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews