தனுஷ் அக்காவை டாக்டர் ஆக்கிய கேப்டன் விஜயகாந்த்.. வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனின் குணம்..

கிராமத்து மண் வாசனையுடன் இயக்குநர் பாரதிராஜாவுக்கு அடுத்த படியாக கைதேர்ந்த இயக்குநர் யாரென்றால் அவர் தனுஷின் அப்பாவான இயக்குநர் கஸ்தூரிராஜா. இயக்குநர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி ராஜ்கிரனை வைத்து என் ராசாவின் மனசிலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து மண் வாசம்வீசும் படங்களை எடுத்தவர்.

இவர் கேப்டன் விஜயகாந்தை வைத்து எடுத்த படம் தான் வீரம் வௌஞ்ச மண்ணு. இந்தப் பட ஷுட்டிங்கின் போது அப்போது தற்செயலாக கேப்டன் விஜயகாந்த் இயக்குர் கஸ்தூரிராஜா வீட்டு வழியாகச் சென்றிருக்கிறார். அப்போது அவரின் டிரைவர் இந்தப் பகுதியில்தான் இயக்குநர் வீடு உள்ளது என்று கூற கேப்டன் விஜயகாந்த் டிரைவரை அவர் வீட்டுக்குச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.

எதிர்பாராதா வேளையில் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் வீட்டிற்கு வந்த விஜயகாந்தை வரவேற்றிருக்கிறார் கஸ்தூரிராஜா. அந்த சமயம் அவரின் மகளும், தனுஷின் அக்காவுமான கார்த்திகா தேவி அழுதபடியே நின்றிருக்கிறார். விஜயகாந்த என்ன விபரம் என்று கேட்க, பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிப்பதற்கு ஆசைப்படுகிறாள். இருந்தும் கட் ஆஃபில் ஒரு மார்க் குறைந்து விட்டது என்று கஸ்தூரிராஜா கூற, உடனே கேப்டன் விஜயகாந்த் அவரைச் சமாதானப் படுத்தி அவர் மருத்துவம் படிக்க தான் உதவி செய்வதாகத் தெரிவித்திருக்கிறார்.

உங்களுக்கு கமல் மாதிரி நடிக்கத் தெரியல.. எந்திரன் ஷூட்டிங்கில் கடுப்பான ரஜினி..

டாக்டருக்குப் படிக்க அதிக பணம் செலவாகும் என்பதை அறிந்து விஜயகாந்தின் அவர் உதவியை அப்போது தயக்கத்துடன் மறுத்திருக்கிறார்  கஸ்தூரிராஜா. ஆனாலும் விடாத கேப்டன் விஜயகாந்த் பெண் பிள்ளை ஆசைப்பட்டு டாக்டருக்குப் படிக்கிறேன் என்கிறாள். நீங்கள் முடியாது என்கிறீர்கள் அப்புறம் ஏன் பிள்ளை பெற்றீர்கள் என்று கடிந்து கொண்டு உடனடியாக போருர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி உடையாருக்குப் போன் செய்திருக்கிறார்.

அவரும் உடனடியாக வரச்சொல்ல விஜயகாந்த் கஸ்தூரிராஜாவின் மகள்பற்றிய விபரங்களைக் கூறி அங்கு அவருக்கு சீட் பெற்றுத் தந்திருக்கிறார். மேலும் காலை முதல் மாலை வரை கஸ்தூரிராஜாவின் மகளுக்காக சிரத்தை எடுத்து அவரை டாக்டர் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். இன்று கார்த்திகா தேவி அப்பலோவில் புகழ்பெற்ற மகளிர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இதனை பேட்டி ஒன்றில் தெரிவித்த கஸ்தூரிராஜா கேப்டன் விஜயகாந்த்தின் மகனுக்கா அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றில் தான் அவருக்குத் தந்தையாக நடித்து வருகிறேன் என்ற தகவலையும் கூறியிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...