பூம் பூம் பும்ரா.. 3 விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியா.. 1983 திரும்புகிறதா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று இறுதி போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் கோப்பையை வெல்ல வாய்ப்பு குறைவு என்று வர்ணனையாளர்கள் கூறினர்.

ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி விட்டதை அடுத்து இந்தியா கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தற்போது கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணியின்  டேவிட் வார்னர், மிட்செல் பார்சல் மற்றும் ஸ்மித் ஆகிய மூன்று விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்து விட்டன. இதனை அடுத்து ஹெட் மற்றும் லாபுசாஞ்சே ஆகிய இருவரும் தற்போது விளையாடி வருகின்றனர்

ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் வரை 3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 47 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் இந்தியாவின் பக்கம் ஆட்டம் திரும்பி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது விக்கெ ட்டாக ஸ்மித், எல்பிடபிள்யூ முறையில் அவுட் என்று அம்பயரால் கொடுக்கப்பட்டது. ஆனால் அது அவுட் இல்லை என்று தெரிய வருகிறது. ஸ்மித் கொஞ்சம் புத்திசாலித்தனமாக ரிவியூ எடுத்திருந்தால் அவர் தப்பித்து இருக்கலாம்

இந்திய அணி வெற்றி கோப்பையை வெல்லுமா? 1983 மீண்டும் திரும்புமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...