திருப்பதியில் பிரம்மோற்சவம் இலவச தரிசனம்- குவியும் மக்கள்

கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் முதல் முறையாக பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரும் ஸ்தலம் என சொல்லக்கூடிய வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருப்பதி கோவில் நடை அடைக்கப்பட்டது. தற்போது இந்த வருடமும் கொரோனா காலத்தில் சில நாட்கள்  பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜை மட்டும் நடைபெற்று வந்தது.

இரண்டு வருடங்களாகவே இலவச தரிசனம் கொரொனா காரணமாக ரத்து செய்யப்பட்டு முந்நூறு ரூபாய் செலுத்தி கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது இந்த டோக்கன்களும் வேகமாக விற்று தீர்ந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முதல் 8000 பேர் ஒரு நாளைக்கு அனுமதி என்ற வகையில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த மாதம் பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம் அத்தோடு சேர்ந்து பிரம்மோற்சவமும் வருவதால் மக்கள் கூட்டம் திருப்பதியில் குவிந்து வருகிறது.

Published by
Staff

Recent Posts