பிகில் பாண்டியம்மாவின் சோகமான பதிவு,.. ரசிகர்கள் ஆறுதல்!!

ரோபோ சங்கர்  தர்ம சக்கரம் படத்தின்மூலம் தனது சினிமாப் பயணத்தினைத் துவக்கினார், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாரி, வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன், மாரி 2 எனப் பல படங்களில் இவரின் சிறப்பான நடிப்பால் மக்களின் மனதினைக் கொள்ளை கொண்டார்.

இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். பிரியங்கா குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு? போன்ற நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.


இவரின் மகள் இந்திரஜா பரதநாட்டியக் கலைஞர், இவர் அட்லி இயக்கிய பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், இவர்கள் குடும்பமாக அவ்வப்போது டிக் டாக் வீடியோக்களை போட்டு வருவர், இவர்களது வீடியோக்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்திரஜா இன்று மிகவும் சோகமான பதிவினை ட்விட்டரில் பதிவிட்டு பலரையும் சோகத்தில் ஆழ்த்திள்ளார்.

அதாவது அம்மம்மாவின் புகைப்படத்தினை வெளியிட்டு “வருஷா வருஷம் நான் தான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுப்பேன். ஆனா இந்த வருஷம் நீ எனக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துட்ட… வாழ்த்து சொல்வதற்கு கூட நீ என்கூட இல்லையே அம்மத்தா லவ் யு” என்று சோகமாக பதிவிட, ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Published by
Staff

Recent Posts