என்ன கமல்சார் BiggBoss-ல இப்படி செய்றீங்களே? குமுறிய யுகேந்திரன்

தற்போது சின்னத்திரையில் ஹாட் டாபிக்காக இருப்பது பிக்பாஸில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தான். பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கமலின் இந்த முடிவுக்கு ஆட்சேபணை தெரிவித்தனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லை அதனால் தான்  பிரதீப் ஆண்டனி வெளியே அனுப்பப்படுகிறார் என்ற கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள்  பிக்பாஸ் போட்டியாளர்களும் இது தவறான முடிவுஎன்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் ஒருபடி மேலபோய் ஷகீலாவும் பிக்பாஸ்-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் மற்ற ஆண்கள் எதற்கு இருக்கிறார்கள் எனவும், சுடிதார் அயர்ன் பண்ணிக் கொடுக்கவும், காதல் கதை பேசத்தான் லாயக்கா எனவும் வெளுத்து வாங்கியிருந்தார்.

பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது குறித்து தற்போது நடக்கும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராகப் பங்கேற்று திரும்பிய பாடகர் யுகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் “எனக்கும், விஜய்க்கும் நடந்தது போன்றுதான் பிரதீப் ஆண்டனிக்கு நடந்துள்ளது. நான் வெளியேற்றப்பட்டபோது என்னை குறை சொன்னாரே தவிர பேச விடவில்லை. அதேபோல் விஜய்க்கும் அதான் நடந்துள்ளது. தற்போது பிரதீப்புக்கும் பேச வாய்ப்பளிக்கவில்லை. ஒவ்வொரு வார இறுதிநாள் முடிவிலும் இதான் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சினிமாவுல ஒருத்தர் கூட சப்போர்ட் பண்ணல.. புலம்பித் தீர்த்த ரஞ்சனா நாச்சியார்

மேலும் வார இறுதிநாள் எபிசோடில் மாயா, பூர்ணிமா போன்றோருக்கு பேச வாய்ப்பு கொடுத்ததாகவும், அது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கெடுதல் பண்றவங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கும் கமல் சார் மனதில் ஏதும் இல்லாமல் பேசும் எங்களைப் போன்றோருக்கு ஏன் பேச வாய்ப்பு வழங்கவில்லை“ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். யுகேந்திரனின் இந்தக் கேள்விக்கு பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க பிரதீப் ஆண்டனி ரெட்கார்டுடன் தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து வாழ்த்து சொன்னது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

மற்ற எந்த சீசன்களிலும் அல்லாமல் பிக்பாஸ் 7-ல் முதல் ஆளாக பவா.செல்லத்துரை விலக விசித்ரா, ஜோவிகா, கூல்சுரேஷ் போன்றோரின் கருத்துக்களால் கொஞ்சமும் பரபரப்புக்கு மிச்சம் வைக்காமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...