செத்துடலாம்னு தோணுச்சு!.. எனக்கே நான் பண்ணது புடிக்கல.. எல்லாத்துக்கும் ஸாரி.. ஐஷு போட்ட அப்படியொரு போஸ்ட்!..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில சீசன்களாக பிரபலங்கள் பங்கேற்காததற்கு முக்கிய காரணமே அதிகப்படியான வன்மம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளேயும் வெளியேயும் காட்டப்படும் உச்சகட்ட கோவம் மற்றும் வன்மம் பிரபலங்களை கடுமையாக பாதித்து வருகிறது.

ஓவியா முதல் அர்ச்சனா, அனிதா சம்பத் என பல பெண் போட்டியாளர்கள் இதற்கு பலிகடா ஆகியுள்ளனர். அந்த நிகழ்ச்சியின் நோக்கமே ஒருத்தரை ஒருத்தர் மட்டம் தட்டுவது, மோசமான காரணங்களை சொல்லி நாமினேட் செய்வது, நாமினேட் ஆனவர்கள் கோபத்தில் சண்டையிடுவது என வெறுப்புணர்வை தூண்டும் நிகழ்ச்சியாகவே பிக் பாஸ் கடந்த பல சீசன்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வன்மத்தை விதைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி

ஆனால் அது ஒரு நல்ல பிளாட்பார்ம் எனக் கமல்ஹாசன் மட்டுமே ஒவ்வொரு சீசனிலும் சொல்லிக் கொண்டு திரிகிறார். மனம் உடைந்து போய் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுபவர்கள் ஏதாவது தவறான முடிவை எடுத்துக் கொண்டால் என்ன ஆவது என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

பிரதீப் ஆண்டனியை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதவர் என பச்சை குத்தி கமல்ஹாசன் வெளியே அனுப்பிய நிலையில், ஐஷு தற்போது வெளியே வந்து தன்னைப் பற்றிய மீம்களையும் ட்ரோல்களையும் பார்த்து மனவேதனை அடைந்துள்ளார்.

ஐஷு மனமுடைந்து எழுதிய கடிதம்

“பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விப்பேன் என்றுதான் உள்ளே சென்றேன். ஆனால், என்னுடைய ஆட்டம் எனக்கே பிடிக்காத அளவுக்கு படுமோசமாக உள்ளதை அறிந்து கொண்டு வருத்தப்படுகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய மேடை, அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள நான் தவறவிட்டேன்.

என்னை நம்பி உள்ளே அனுப்பிய பெற்றோர்களையும் நான் ஏமாற்றி விட்டேன். எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த விசித்ரா, யுகேந்திரன், மணி மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோரின் பேச்சையும் நான் பொருட்படுத்தவே இல்லை.

F ObsvXaIAAegal

வனிதா விஜயகுமார் மேடம் உங்களுடைய மகள் ஜோதிகாவை விட ஒரு வயது தான் அதிகம் எனக்கு அதிகம். ஆனால் அவள் அளவுக்கு கூட நான் தெளிவு கிடையாது. என்னைப் பற்றி நீங்கள் கடுமையாக விமர்சித்ததை பார்த்தேன். நான் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெட்ட வார்த்தையில் பேசிய எதற்காகவும் நான் வருந்துகிறேன். ஆனால் அதைக் குறிப்பிடும் நோக்கில் பலரும் எண்ணை அதே கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி இருப்பதை பார்க்கும்போது இந்த சமூகத்தில் இருந்து எப்படி எதை நான் கற்றுக் கொள்வேன் என்பது எனக்கு தெரியவில்லை. என் மீது எத்தனை கற்களை வேண்டுமானால் எறியுங்கள். ஆனால் என் பெற்றோர் மீது எதையும் வீசாதீர்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நான் என் உயிரை மாய்த்துக் கொள்ளவும் நினைத்தேன். ஆனால் என் பெற்றோர்களுக்காக வாழ விரும்புகிறேன் நன்றி!” என ரொம்பவே மனமுடைந்து ஒரு பெரிய கடிதத்தை பதிவிட்டுள்ளார் ஐஷு.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு ரியாலிட்டி ஷோ தானே தவிர ரியாலிட்டி கிடையாது. அதை வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் அவர்களை மீது வன்மத்தை கக்க வேண்டாம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...