பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப்பின் ஒரு நாள் சம்பளம் என்ன தெரியுமா?

பிரபல சின்னத்திரை தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் அக்டோபர் ஒன்றாம் தேதி மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், மாயா கிருஷ்ணன்,ரவீனா தாஹா, வினுஷா தேவி, விசித்ரா, பவா செல்லதுரை, யுகேந்திரன், பூர்ணிமா ரவி,சரவண விக்ரம், விஷ்ணு, ஐஷு, விஜய் வர்மா, அனன்யா ராவ், பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்‌ஷயா உதயகுமார் 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக தொடங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஒயில் கார்ட் என்ட்ரி ஆக தினேஷ் கோபால்சாமி, அன்னபாரதி,அர்ச்சனா, ஆர்.ஜே. பிராவோ,கானா பாலா என ஐந்து போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். அதில் இதுவரை விஜய் வர்மா, வினுஷா தேவி,பவா செல்லதுரை,யுகேந்திரன்,அன்னபாரதி என ஐந்து போட்டியாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து கடந்த வாரம் ரெட் கார்ட் கொடுத்து பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியது டி ஆர் பி யின் ரேட்டிங்கை எகிற செய்தது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை முன்வைத்து சக போட்டியாளர்கள் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றியதை ரசிகர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். மேலும் இது குறித்து நடுவரான கமல் முறையாக விசாரிக்கவில்லை என்றும், அவரின் ஈகோ காரணமாக நிகழ்ச்சி நடத்துபவர்களை கட்டாயப்படுத்தி இந்த முடிவை எடுக்க வைத்ததாக கமல் மீதும் சமூக வலைதளங்களில் குற்றங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் பிரதீப்பிற்கு ரெக்கார்ட் கொடுத்ததை கண்டித்து முன்னால் பிக் பாஸ் போட்டியாளர்களான கவின், ஓவியா, பிரியங்கா, அமீர், பாவனா, எழுத்தாளர் சினேகன் பலரும் தங்களது ஆதரவை பிரதீப்பிற்கு கொடுத்து வருகின்றனர்.

ரெட் கார்ட் கொடுத்து சூழ்ச்சியில் தான் பிரதீப்பை வெளியேற்றி விட்டார்கள் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. அடுத்தடுத்து ரசிகர்கள், பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும் பொருட்டு தற்பொழுது பிரதீப் ஆண்டனி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனியை விட உள்ளிருக்கும் பெண்கள் அதிகமாக கெட்ட வார்த்தை பேசி வருவதாகவும் அவர்களுக்கு முதலில் ரெக்கார்ட் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

மேலும் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொண்டால் மட்டுமே இந்த நிகழ்ச்சி வெற்றி பெறும் என்றும் அவர் மீண்டும் உள்ளே வரவேண்டும் என்று தங்களது ஆதரவை பிரதீப்பிற்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதிப் ஒரு டூவீட் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகனாக இருந்து கொண்டு அஜித்தை புகழ்ந்து தள்ளும் ராகவா லாரன்ஸ்!

அதில் அவர் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், தன் கையில் இரண்டு ரெட் கார்டுகள் கொடுக்கப்பட்டால் வீட்டில் உள்ள இரண்டு நபர்களை வெளியேற்ற தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தன்னை அந்த வார கேப்டனாக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதீப் சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளார்.

இந்த நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் பிரதீப் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவது மக்களின் ஆசையாக உள்ளது. இந்நிலையில் பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது அவரின் சம்பளம் குறித்த தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் அனைவருக்குமே ஒரு நாளைக்கு பல ஆயிரம் ரூபாய் என்று கணக்கில் இறுதியில் பெரிய தொகை ஒன்று சம்பளமாக வழங்கப்படுகிறது. அதன்படி பிரதீப்க்கு ஒரு பெரிய தொகை வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு ரூபாய் 20,000 சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது அவர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளதால் மொத்த ரொக்க தொகையாக 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews