பிக் பாஸ் மஹத் நடிக்கும் ‘காதலே காதலே’ படப்பிடிப்பு நிறைவு… ரிலீஸ் எப்போ தெரியுமா…?

நடிகர் சிம்புவின் தோழரான நடிகர் மஹத் ராகவேந்திரா ஒரு சில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் ஆனவர். ‘சென்னை 600028 பாகம் 2’, நடிகர் அஜித் நடித்த ‘மங்காத்தா’, நடிகர் விஜய் நடித்த ‘ஜில்லா ‘ ஆகிய படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்ததன் வாயிலாக மக்களுக்கு பரிச்சயமானவர். எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு தனிச்சிறப்பை பெற்று தந்தது.

தற்போது பிரபு ராம் .சி இயக்கிய ‘கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா தத்தா உடன் இணைத்து நடித்திருந்தார். நடிகர் யோகிபாபு மற்றும் நடிகை சாக்ஷி அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர். டி. மதன்குமார் தயாரிக்க தரன் குமார் இசையமைக்கிறார். இப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

அதையடுத்து, ஸ்ரீ வாரி பிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிப்பில், ஆர். பிரேம்நாத் இயக்கும் திரைப்படம் ‘காதலே காதலே’. கதையின் நாயகனாக மஹத் ராகவேந்திரா மற்றும் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர். இயக்குனர் பாரதிராஜா, ஸ்ரீஜா ரவி, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் அய்யப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதை பற்றி தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் கூறுகையில், நம் இதயங்களில் என்றும் நினைவிருக்கும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘ஜோ’ போன்ற காதல் திரைப்படங்களை போலவே இந்த ‘காதலே காதலே’ படமும் அனைவரின் மனதிலும் நிற்கும். ஒரு புதுவிதமான புத்துணர்ச்சியூட்டும் படமாக இருக்கும்.

ப்ரீ புரொடெக்ஷன் வேலைகள் சரியாக இருந்தால் மட்டுமே தடங்கல் எதுவும் இல்லாமல் படப்பிடிப்பு நிறைவடையும். அதன்படி, சரியான திட்டமிடுதலின் காரணமாக ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடித்து என்னை மகிழ்ச்சி படுத்தி விட்டார்கள். ஏற்கனவே போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டன. விரைவில் படத்தின் ஆடியோ ரிலீஸ், ட்ரைலர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...