பாக்யராஜால அவமானத்தை சந்திச்சு.. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பானுப்ரியா..

தமிழ் சினிமாவின் 90 களில் பல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்ததுடன் மட்டுமல்லாமல் ரஜினி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும் எடுத்திருந்தவர் தான் பானுப்ரியா. சுமார் 15 ஆண்டுகள் வரை முன்னணி நடிகையாக நடித்து வந்த பானுப்ரியா, அதன் பின்னர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் பரதநாட்டியத்தில் தேர்ந்த ஒருவராக இருந்ததால் நடிப்பிலும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. அப்படி இருக்கையில் தான் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான மெல்ல பேசுங்கள் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாகவும் அவர் அறிமுகமாகி இருந்தார்.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல திரையிலும் தோன்றியதால் அனைவருக்கும் அவரை முதல் சில படங்களிலேயே மிகவும் பிடித்து விட்டது. அது மட்டுமில்லாமல், ரஜினிகாந்த், சரத்குமார், மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ள பானுப்ரியா, பல ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தார்.

தொடர்ந்து, தற்போது திரைத்துறையில் இருந்து விலகாமல் தொடர்ந்து தனக்கு வரும் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார். அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் 3 படத்தில் அவரது தாயாக நடித்து அசத்திருப்பார். இதனைத் தொடர்ந்து மகளிர் மட்டும், மகாநதி, கடைக்குட்டி சிங்கம், கடந்த பொங்கல் விருந்தாக வெளியான அயலான் படம் என பல திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் குணச்சித்திர நாயகியாகவும் உள்ளார் பானுப்பிரியா.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜால் தனது பள்ளி படிப்பு நின்று போனது பற்றி அவர் பேசியுள்ள விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெல்ல பேசுங்கள் படத்திற்கு முன்பாகவே பாக்யராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் பானுப்ரியா நாயகியாக அறிமுகமாவதாக இருந்தது. 15 வயது இருந்த போது பாக்யராஜ் இயக்கத்தில் ஒரு படத்தின் ஆடிஷனுக்காக பானுப்ரியா சென்றுள்ளார். அப்போது பானுப்ரியாவின் பெர்ஃபார்மன்ஸ் பாக்யராஜூக்கு பிடித்து விட்டதாகவும், அவரை படத்தில் நடிக்க வைக்கவும் முடிவு செய்திருந்தார்.

ஆனால் போட்டோ ஷூட்டின் போது பானுப்ரியா தான் நினைத்த நாயகி கதாபாத்திரத்தை விட சற்று இளமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக தேர்வு செய்த பானுப்பிரியாவை வேண்டாம் என்றும் பாக்யராஜ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தான் பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக பள்ளியில் உள்ள சக மாணவ மாணவிகளிடம் தெரிவித்துள்ளார் பானுப்பிரியா. அப்படி இருக்கையில் கடைசி தருணத்தில் வாய்ப்பு கிடைக்காமல் பறிபோனதால் தன்னுடன் பயிலும் மாணவ மாணவிகள் கிண்டல் செய்வார்கள் என்ற அவமானத்திலேயே பயந்து போய் பின்னர் பள்ளிக்கு போவதை பானுப்ரியா நிறுத்தி உள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றிலும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...