மறைந்து வரும் மரப்பாச்சி பொம்மைகள்.. மருத்துவ குணம் நிறைந்த மரப்பாச்சி பொம்மைகள் பற்றி தெரியுமா?

மரப்பாச்சி பொம்மைகள் என்பது ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் திருமணம் ஆனவர்களுக்கு நினைவு பரிசாகவும், குழந்தைகளுக்கு விளையாட்டு பொருளாகவும் கொடுக்கும் பொம்மையாகும்.

images 3 29

இன்று குழந்தைகள் இருக்கும் வீடு என்றாலே அங்கு விளையாட்டு பொருட்களுக்கு குறைவே இருக்காது. குழந்தை பிறந்ததிலிருந்து பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் அந்த குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்விப்பார்கள். வண்ண வண்ணமாய் குவிந்து கிடக்கும் அந்த விளையாட்டுப் பொருட்களால் குழந்தைக்கு சிறிது நேரம் மகிழ்ச்சி கிடைக்குமே தவிர வேறு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவ பயனும் நிறைந்தது.

images 3 28

அப்பொழுது புகைப்பட வசதி இல்லாத காலம் ஆதலால் திருமணம் ஆனவர்களுக்கு மரப்பாச்சி பொம்மைகள் பரிசாக வழங்கப்படுமாம். ஆண் பெண் பொம்மைகள் திருமண கோலத்தில்  அலங்கரிக்கப்பட்டு திருமணத்தின் நினைவாக கொடுக்கப்படும். அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகு அந்த பொம்மைகளை வைத்தே விளையாடுவர். ஊசியிலை, தேக்கு,  கருங்காலி, செம்மரம், செஞ்சந்தனம் போன்ற மரங்களால் இந்த மரப்பாச்சி பொம்மை செய்யப்பட்டிருக்கும்.

குழந்தைகள் பொதுவாக நான்கு மாதங்கள் ஆன பிறகு கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் வைத்து கடிக்கத் துவங்குவார்கள். பிளாஸ்டிக் ரப்பர் போன்ற பொருட்களை கடிப்பதனால் குழந்தைகளுக்கு ஆபத்துக்கள் உண்டாகலாம். ஆனால் இந்த மரப்பாச்சி பொம்மைகள் குழந்தைகளுக்கு நன்மை தரக்கூடியது. அப்பொழுதெல்லாம் குழந்தைக்கு சளி தொல்லை ஏற்பட்டால் மரப்பாச்சி பொம்மையை இழைத்து தாய்ப்பாலை குழைத்து நெற்றியில் பத்து போட்டு விடுவார்கள். இப்படி விளையாட்டுப் பொருளாக மட்டும் இல்லாமல் நினைவு சின்னமாகவும் மருத்துவத் தன்மை வாய்ந்ததாகவும் மரப்பாச்சி பொம்மைகள் இருந்துள்ளன.

இன்று இவை அரிய அருங்காட்சியத்தில் வைக்கக்கூடிய பொருட்கள் போல மாறிவிட்டன. வண்ணமயமாய் பெயிண்ட் செய்யப்பட்டு பல மர பொம்மைகள் கிடைத்தாலும் அவை உண்மையிலேயே மருத்துவ குணம் நிறைந்த மரத்தால் செய்யப்பட்டது தானா என்பது சந்தேகம்தான்.

karungali marapachi bommai ebony wood2

பெரும்பாலும் கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளே அதிகம் பயன்படுத்துவர். மரப்பாச்சி பொம்மை வாங்குவது என்றால் அவை உண்மையிலேயே கருங்காலி மரத்தால் செய்ததா என்று தண்ணீரில் ஊற வைத்து சோதித்துப் பார்த்து கண்டுபிடிக்கலாம்.

இனி உங்கள் உறவினர்கள் நண்பர்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினால் விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்களை விட இந்த மரப்பாச்சி பொம்மையை வாங்கி கொடுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews