காபி பிரியரா நீங்கள்? நீங்க தினமும் விரும்பி குடிக்கிற காபி உங்கள் உடலுக்கு நல்லதா? கெட்டதா??

காபி என்ற வார்த்தையை கேட்டதுமே பலருக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். காலை எழுந்ததும் அந்த நாளை கையில் ஒரு கப் காபியோடு ஆரம்பிக்கவே பலரும் விரும்புவர்.

காபி

பில்டர் காபி, இன்ஸ்டன்ட் காபி என்று மட்டுமில்லாமல் பல வகைகளில் காபி உள்ளது. காபி பலருக்கு விருப்பப்  பட்டியலில் உள்ள முக்கியமான பானம். ஒரு நாளைக்கு ஒரு காபி இரண்டு காபி என்று பருகுவோர் ஒருபுறம் இருக்க.. நினைக்கும் போதெல்லாம் காபி குடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தலைவலி, வேலைப்பளு, மகிழ்ச்சி, சோகம், அழுகை என அனைத்திற்கும் தீர்வாக காபியை நாடுவதை வழக்கமாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி காபியை நினைத்த நேரமெல்லாம் குடிப்பது நல்லதா? காபியில் என்னென்ன இருக்கின்றன என்பதை நாம் பார்க்கலாம்.

காபி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்:

coffee 171653 1280

ஊட்டச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த காபி:

ஒரு கோப்பை காபியில் வைட்டமின் பி1 2%, வைட்டமின் பி2 2%, ஃபோலேட் 1%, மாங்கனிஸ் 3%, பொட்டாசியம் 3%, மெக்னீசியம் 3%, பாஸ்பரஸ் 2% உள்ளன.

அதேபோல் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்ததாகவும் உள்ளது. மேற்கத்திய உணவு கட்டுப்பாட்டு பழக்கத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த உணவை விட காபியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

காபி மெட்டபாலிசத்தை அதிகமாக்கும்:

கஃபைன் டி, குளிர்பானம் போன்ற பொருட்களில் இருந்தாலும் காபியில் அதிக அளவு இருக்கிறது. இது மூளையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்வோருக்கு சிறந்த ஊக்கியாக கஃபைன் இருக்கும். காபி மூலம் உடற்பயிற்சி செயல்பாட்டை 11 முதல் 13 சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.

காபி மூளை சம்பந்தப்பட்ட அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் நோயிலிருந்து காத்திடும்:

காபி பரகுபவர்களுக்கு மூளையில் நரம்பியல் சம்பந்தப்பட்ட நோயான அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 65 சதவீதம் குறைகிறது. பார்க்கின்சன் நோய் ஏற்பட 32 முதல் 65% வாய்ப்பு குறைவாக இருக்கிறது. 

காபி மன‌அழுத்தத்தை குறைக்கும்:

காபி பருகும் நபர்களில் 20% பேருக்கு மன அழுத்தம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் காபி பருகுபவர்களுக்கு தற்கொலை எண்ணமும் குறைவாகவே இருக்கிறதாம்.

coffee 3120750 1280

காபி யாரெல்லாம் பருகக் கூடாது:

கர்ப்பிணி பெண்கள் காபியை அதிக அளவு எடுத்துக் கொள்வது கூடாது.

அதிக பதட்டம் உள்ளவர்களும் இரவில் தூக்கம் இன்மையால் தவிப்பவர்களும் காபியை தொடக்கூடாது.

இம்சை அரசன் இன்சோம்னியா.. தூக்கமின்மை (Insomnia) ஏற்பட காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:
  • பதட்டம் அதிகரித்தல்.
  • தூக்கம் இன்மை அதிகரித்தல்.
  • செரிமான பிரச்சனைகள் உண்டாகலாம்.
  • மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் காபியானது மெதுவாக இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.
  • காபி எளிதில் அடிமையாக்கும் தன்மை உடையது. சிலர் காபி பருகினால் தான் வேலை நடக்கும் என்று காபிக்கு அடிமையாகி விடுவர் ‌‌.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற தொந்தரவு ஏற்படலாம்.
  • உயர் ரத்த அழுத்தத்திற்கும் வழி வகுக்கிறது.

coffee beans 1291656 1280

காபியில் கஃபைன் இல்லாத காபி பருகலாமா? என்று கேட்டால் காபி கொட்டையில் கஃபைனை நீக்குவதற்காக பல கெமிக்கல்கள் கொண்டு கழுவுகிறார்கள் கஃபைன் நீங்கினாலும் அந்த வேதியல் பொருட்கள் நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. காப்பி பிடிக்கும் என்பதற்காக அதிக அளவு சர்க்கரை நிறைந்த காப்பியையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எதுவும் அளவாய் இருக்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews