உலர் திராட்சையினை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

உலர் திராட்சை இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரித்து, இரத்த சோகைப் பிரச்சினையினை சரி செய்கின்றது. மேலும் உலர் திராட்சையினை நீரில் ஊறவைத்து தினமும் 5 முதல் 6 சாப்பிட்டு வந்தால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையானது சரியாகும்.

மேலும் உலர் திராட்சை செரிமானப் பிரச்சினைகளான மலச் சிக்கல், பசியின்மை, மற்றும் வயிற்றுப் போக்கு பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

மேலும் ஈறுகளில் இரத்தம் கசிதல், எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து இருத்தல் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் உலர் திராட்சையை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

காசநோயின் போது உடல் எடை குறைவது வழக்கமான ஒன்று, அந்த நேரத்தில் இரத்த விருத்தியினை அதிகரித்து உடலினை வலுவாக்கும்.

அதேபோல் மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களும் உலர்திராட்சையை பசும்பாலில் ஊறவைத்து அரைத்துக் குடித்தால்,  மஞ்சல் காமாலை  நோயில் இருந்து மீளலாம் என்று கூறப்படுகின்றது.

தலைமுடி உதிர்வுப் பிரச்சினை உள்ளவர்கள் உலர் திராட்சையினை தொடர்ந்து எடுத்துவரும்போது மிகச் சிறந்த தீர்வினைப் பெறலாம்.

 

Published by
Staff

Recent Posts