பாடி லோஷன் எதற்காக பயன்படுத்துகிறோம்? உடலுக்கு பாடி லோஷன் பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..?

பாடி லோஷன் போன்றவை உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவும் சரும பராமரிப்பு பொருட்களாகும். இது வறண்ட சருமத்திற்கு மட்டும் இல்லாமல் அனைத்து சருமத்தினருக்கும் பொதுவானது. மழை, வெயில், பனி போன்ற பருவநிலை மாற்றங்களினால் சருமத்தில் நீர்ச்சத்து இல்லாமல் வறண்டு போகக் கூடிய நிலை ஏற்படும். உடலின் சில பகுதிகளில் உள்ள தோல்கள் கடினமாக மாறும். கை முட்டிகள், கால் முட்டிகள் போன்ற இடங்கள் வறண்டு சொரசொரப்பாக இருப்பதாக நீங்கள் உணர்ந்திருக்கலாம். பாடி லோஷனை பயன்படுத்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதால் பலவிதமான நன்மைகள் பெறலாம்.

1. சிலருக்கு அதிக சூரிய ஒளியினால் சருமத்தில் எரிச்சல்கள் ஏற்படலாம் இவர்கள் பாடிலோஷனை உபயோகிப்பது நல்ல தீர்வினை தரும். குளியல் நேரத்திற்கு பிறகு பாடி லோஷனை அப்ளை செய்வதன் மூலம் உடல் நீண்ட நேரம் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளும்.

2. சிலருக்கு எண்ணெய் சருமம் அல்லது சாதாரண சருமமாக இருந்தாலும் கைமுட்டி , கால்முட்டி போன்ற இடங்கள் வறண்டு சொரசொரப்பாக இருக்கலாம். அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பாடி லோஷனை உறங்கச் செல்வதற்கு முன் தடவினால் சில நாட்களிலேயே அந்தப் பகுதிகள் மிருதுவாக மாறி இருப்பதை உணரலாம்.

3. உடலில் தோலின் வெளிப்பகுதி சிலருக்கு மிகவும் கடினமாக இருந்தால் இந்த பாடி லோஷனை அப்ளை செய்து பார்க்கலாம். குறிப்பாக பாதத்தில் மேல் பகுதி பலருக்கு கடினமாக இருப்பதாக தோன்றும் அதனை எக்ஸ்போலியட் செய்து பாடிலோஷனை தொடர்ந்து தடவி வர மென்மையாக மாறும்.

4. கை, கால், பாதம் என உடல் முழுவதும் பாடி லோஷனைக் கொண்டு மசாஜ் செய்வதால் ஓய்வாக லேசாக உணர முடியும். மேலும் மெல்லிய நறுமணமூட்டப்பட்ட பாடி லோஷன்கள் மனதிற்கு இதமாகவும் அமையும்.

5. சருமம் நல்ல நீரேற்றத்துடன் இருப்பதால் வறண்ட சருமம் அதன் வறட்சியில் இருந்து விடுபட்டு நல்ல பொலிவினை பெற தொடங்கும்.

இந்த பாடி லோஷன்கள் லோஷன் வடிவில் மட்டும் இல்லாமல் பாடி எண்ணெய்கள், மற்றும் பாடி பட்டர்கள் என பல வகைகளில் உள்ளன. அதில் உங்கள் சருமத்திற்கு எது சிறந்தது என்று ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் உங்கள் சருமத்தின் அதிகம் வறட்சியாக காணப்படும் பகுதியில் கூடுதல் கவனம் எடுத்து பாடி லோஷன் பயன்படுத்தவும்.

Published by
Sowmiya

Recent Posts