விரதத்தினால் ஏற்படும் பயன்கள்…..

நம்மில் பலர் பல காரணங்களுக்காக நமக்கு பிடித்த கடவுளுக்கு விரதம் இருந்து அவர்களை வணங்குவோம். இப்படி விரதம் இருந்து கடவுளை வேண்டி வணங்கினால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.

அதாவது இப்படி விரதம் இருந்து கடவுளை வழிபடும்போது கடவுள் மனம் இறங்கி நமக்கு நல்வினையை செய்வார் என்பது நம்முடைய பலரின் நம்பிக்கை. அது உண்மைதான். இந்த விரத முறைகள் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

அறிவியல் பூர்வமாக கூற வேண்டுமென்றால் விரதம் இருப்பது மிக மிக நல்லது. விரதம் இருப்பதால் பல வகையான நோய்கள் குணமாகும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. ஆம், நம் உடலில் உள்ள அசுத்த ரத்ததை சுத்திகரிக்கிறது.

உண்மையில் சொல்லப்போனால் நம் உடல் இயக்கங்களையெல்லாம் நல்வழிப்படுத்துகிறது. அதாவது நம் உடல் நலக் குறைவால் அதிகமாக சாப்பிட முடியாமல், குறைவாக சாப்பிட்டாலும் அந்நேரங்களில் மட்டும் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோம்.

அச்சமயத்தில் நாம் எடுத்து கொள்கிற உணவு வகை தான் நம் உடலுக்கு மிகவும் நல்லது. மற்ற நாட்களில் நாம் எடுத்து கொள்கிற உணவு வகைகள் சரியானது கிடையாது. எனவே தான் விரதம் இருந்து அவற்றை சரி செய்கிறோம்.

அதாவது நாம் விரதம் இருப்பதால் நம் உடல் நிலை சீராகிறது. மேலும், விரதம் இருப்பதால் மிக சிறந்த ஒரு நன்மையும் உள்ளது. விரதம் புற்றுநோயின் அளவைக் கூட கட்டுக்குள் கொண்டு வருகிறதாம். எனவே தான் நான் கூறுகிறேன் விரதம் இருப்பது மிகவும் நல்லது.

Published by
Staff

Recent Posts