BEING HUNGRY திட்டம்: ரம்ஜான் பொருட்களை 5000 குடும்பங்களுக்கு வழங்கிய சல்மான்கான்!!

இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 17 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் அவரவர் பங்கிற்கு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ், லூலியா, கமல் கான் ஆகியோருடன் இணைந்து தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் அருகில் உள்ள கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று வழங்கி வருகிறார்.

9e7402cd2d6ad240ea235e6b59a138bf

இந்தவாரம் திங்கள் கிழமையன்று உலகம் முழுவதிலும் இஸ்லாம் நண்பர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். அவர்களுக்கு உதவும் பொருட்டு சல்மான் கான் 5000 ஏழை குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை அளித்துள்ளார்.

அதாவது BEING HUNGRY என்ற திட்டத்தின் மூலமாக இந்த உதவிகளை செய்துள்ளதாகக் கூறியுள்ள அவர், “மும்பையில் வாழும் மக்கள் பசியோடு தூங்குவதை நான் விரும்பவில்லை. என்னால் முடிந்த உதவிகளை நான் தொடர்ந்து செய்வேன்.

உணவுப் பொருட்களின் தேவை இருக்கும் நபர்களுக்கு எனது பணியாட்கள் தொடர்ந்து உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...