உடல்நலம்

தனியார் மருத்துவமனைகளையே தட்டி தூக்கும் தமிழக அரசின் “பே வார்டு” திட்டம்…!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளை போல் நோயாளிகள் கட்டணம் அடிப்படையில் சிகிச்சைப் பெறுவதற்காக ‘பே வார்டு’கள் அமைக்க 26 லட்ச ரூபாய் மதிப்பில் முதல் கட்டமாக ஒப்பந்த பள்ளி வெளியிடப்பட்து

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிக நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வெளி நோயாளிகள், 3,500 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனியாரை போல் நோயாளிகள் கட்டணம் அடிப்படையில் சிகிச்சைப்பெறுவதற்கு ‘பே வார்டு’ திட்டத்தை சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

தென்தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘பே வார்டு’கள் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான சிவில் ஒர்க் தொடங்குவதற்கு தமிழக அரசு, மதுரை அரசு ராஜாஜி மருத்துமவனைக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 18 ‘பே வார்டு’கள் அமைக்கப்படுகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் கட்டிடத்தில் 10 ‘பே வார்டு’களும், அண்ணா பஸ்நிலையம் அருகே உள்ள தலைக்காய அவசர அறுவை சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில் 8 ‘பே வார்டு’களும் அமைக்கப்படுகிறது..
முதல் கட்டமாக அவசர சிகிச்சை பிரிவில் பே வார்டு அமைப்பதற்காக பொதுப்பணி துறையின் சார்பாக சுமார் 26 லட்ச ரூபாய் செலவில் கட்டுமான பணிகளை நடத்துவதற்காக ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை அடுத்து விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Published by
Amaravathi

Recent Posts