இனிமையான படங்களை இயக்கிய பாலு ஆனந்த்

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனிடம் பல்வேறு படங்களில் எண்பதுகளில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலு ஆனந்த். இவரும் சுந்தர்ராஜனை போல கோயமுத்துர்காரர் என்பதால் கோயமுத்துர் குசும்பு என்று சொல்வார்களே அது கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும்.

48c52eb03a02db1b61e5c410713fc658

சுந்தர்ராஜனின் ஆரம்பகால படங்களில் துண்டு, துக்கடா வேடங்களில் தலைகாட்டியும் வந்தார். இவரும் மிக இனிமையான அழகான படங்களை இயக்கியுள்ளார்.

அதில் ஒரு அழகிய படம்தான் நானே ராஜா நானே மந்திரி. எதுவுமே படிக்காத முரட்டுத்தனமான காட்டுமிராண்டி அவனுக்குள் வரும் காதல், இந்த உணர்வுகளை வைத்து மென்மையாகவும் காமெடி கலந்தும் இப்படத்தை இயக்கி இருந்தார்.

இளையராஜாவின் இசையும் இப்படத்துக்கு பலம் சேர்த்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற மயங்கினேன் சொல்ல தயங்கினேன் என்ற பாடல் இக்காலத்து யுவன் யுவதிகளையும் அசைத்து பார்க்கும் படமாக இருந்தது.

இவர் இயக்கிய மற்றொரு படம் அண்ணாநகர் முதல் தெரு இதில் இளையராஜாவுடன் பணிபுரியவில்லை என்றாலும் இனிமையான பாடல்களை இப்படத்துக்காக இசைத்து கொடுத்தார் சந்திரபோஸ்.

படித்து விட்டு வேலை இல்லாத இளைஞன் அவனுக்குள் கடந்து போன சோகமான காதல் கதை, மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு. ஏ பச்சைக்கிளி உள்ளிட்ட பாடல்கள் மிக பிரபலமான பாடல்களாக இன்றளவும் விளங்குகிறது.

ரசிகன் ஒரு ரசிகை என்றொரு படம் இந்த படத்துக்கு இசையமைத்தது ரவீந்திரன் என்ற மலையாள இசையமைப்பாளர். ஏழிசை கீதமே, பாடி அழைத்தேன் உள்ளிட்ட பாடல்கள் இப்படத்தில் பெரும்பங்கு வகித்து இப்படத்தை அறிய வைத்தது.

பின்பு உனக்காக பிறந்தேன் என்ற படத்தை பிரசாந்த், மோகினி நடிப்பில் உருவாக்கினார்.இது பெரிதாக பேசப்படவில்லை.

மன்சூர் அலிகான் பெயரிலேயே சாதனை படைத்த ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜகுலோத்துங்க காத்தவராய கிருஷ்ண காமராஜன் படத்தை இயக்கினார். அதன் பிறகு மன்சூர்

ஒரு கட்டத்தில் காமெடி நடிகராக மட்டுமே தொடர்ந்த பாலு ஆனந்த் கடந்த ஒரு வருடம் முன்பு திடீர் மரணமடைந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...