பிதாமகன் படத்துல அருண் விஜய் நடிச்ச மாதிரி இருக்கு!.. அப்டேட் ஆகாத பாலா.. வணங்கான் டீசர் ரிலீஸ்!

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது, அருண் விஜய் இந்த படத்தில் பிதாமகன் படத்தில் சியான் விக்ரம் நடித்தது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை ஏமாற்றி உள்ளது.

சேது படத்தில் அறிமுகமான பாலா இரண்டாம் பாதியில் வித்தியாசமான சீயான் விக்ரமை காட்டி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களின் தன் பக்கம் கவர்ந்தார். தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை என பல படங்களை இயக்கினார்.

வணங்கான் டீசர் ரிலீஸ்: 

ஆரம்பத்தில் பாலா இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் போட்டிபோட்டு வந்த நிலையில், அதன் பின்னர் அவரை கண்டுக்கவே இல்லை. சியான் விக்ரம் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்களை பாலா படங்களில் இனி நடிக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டனர்.

பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த இயக்குனர் பாலாவுக்கு வணங்கான் படத்தை தயாரித்து நடிக்க முடிவு செய்து நடிகர் சூர்யா உள்ளே வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து கதை ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் இருக்கும் இடையே பிரச்சனை வெடித்து வந்தன. ஒரு கட்டத்துக்கு மேல் பாலா படத்தில் நடிக்க முடியாது என்கிற முடிவை எடுத்த நடிகர் சூர்யா படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

நடிகை கீர்த்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்த நிலையில், நடிகர் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகியதும் கீர்த்தி சட்டியும் விலகிவிட்டார். சூர்யா போனால் என்ன வணங்கான் படத்தை எடுத்துத் திருவேன் என வணங்கான் அகவே மாறிய பாலா அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து ரோஷினி பிரகாஷ் என்னும் புதுமுக நடிகை ஹீரோயின் ஆக மாற்றி வணங்கான் படத்தை எடுத்துள்ளார்.

பிதாமகன் பாதிப்பு:

பிதாமகன் படத்தில் சியான் விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் அப்படியே அருண் விஜய் நடித்தால் எப்படி இருக்குமோ அதே போலத்தான் இந்த டீசர் வெளியாகி இருக்கிறது. மேலும் அருண் விஜய் வசனம் ஏதும் பேசாமல் சியான் விக்ரம் பிதாமகன் படத்தில் எப்படி கத்துவாரோ அதேபோல கத்துகிறார். ஒருவேளை இந்தப் படத்தில் அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

வணங்கான் டீசரை பார்த்த ரசிகர்களுக்கு கன்னியாகுமரியின் சுற்றுலா வீடியோவை பார்த்தது போல மட்டுமே உள்ளது பாலா படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

அருண்விஜய் அசத்தல்:

இயக்குனர் பாலா எந்த மாதிரியான கதையை மையப்படுத்தி இயக்கியிருக்கிறார் என்பதை படத்தைப் பார்த்தால் தான் தெரியவரும். ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக ஏற்று அருண் விஜய் எந்த ஒரு குறையும் சொல்லாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி மிரட்டலாக காட்டப்படுகின்றனர், வழக்கம்போல பாலா படத்தில் வரும் ஓவர் எமோஷனல் ஹீரோயினாகவே அறிமுக நடிகை ரோஷினி பிரகாஷ் நடித்திருப்பதாக தெரிகிறது. கடைசி காட்சியில் சாக்கடையில் இருந்து பிள்ளையார் மற்றும் பெரியாரின் சிலைகளை தூக்கிக் கொண்டு அருண் விஜய் காட்சி அசத்தலாக உள்ளது. அந்த காட்சியைப் போல ஒட்டுமொத்த படமும் வெளியானால் பாலா சரியான கம்பை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...