ஷாலினி – ஷாமிலி.. குழந்தை நட்சத்திரங்களாக தடம்பதித்த நடிகைகள்..!!

Shalini-Shamlee: தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களாக புகழ்பெற்றவர்கள் ஷாலினி – ஷாமிலி. அக்கா தங்கைகளான இவர்கள் இருவரும் ஒவ்வொரு படத்திலும் தங்கள் நடிப்பு திறமையை சிறுவயதிலேயே பதித்து விட்டனர்.

அப்படி ஷாலினி நடித்த படம் பந்தம், பிள்ளை நிலா.  சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பந்தம் திரைப்படத்திலும் மனோபாலா இயக்கத்தில் வெளியான பிள்ளை நிலா படத்திலும் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக அற்புதமாக நடித்திருப்பார்.

கணவர் அஜித்திற்காக ஷாலினி உருவாக்கிய பிரத்யேக Shirt.. இந்த பாட்டுல கவனிச்சுருக்கீங்களா?

அதைத்தொடர்ந்து அமுதகானம், விடுதலை, நிலவே மலரே என பல படங்களில் நடித்துள்ளார். அதே போல் 90களில் இவரது தங்கை ஷாமிலி  அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதில் இவரின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இந்த படத்திற்கு ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் தமிழ்நாடு அரசின் விருதும் கிடைத்தது. அதை தொடர்ந்து துர்கா, தேவர் வீட்டு பொண்ணு என பிஸியான குழந்தை நட்சத்திரமானார் ஷாமிலி.

அதன்பிறகு குழந்தை நட்சத்திரங்களாக திரையில் ஜொலித்த இவர்கள் இருவரும் கதாநாயகிகளாகவும் படங்களில் நடிக்க தொடங்கினர். 1997 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அணியாதி பிரவு படத்தின் மூலமாக ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானார்.

கீழே விழுந்தும் எழுந்திருக்காத அஜித்.. அவருக்கு என்ன ஆச்சு? பதட்டமான பட குழு.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த நிகழ்வு..!!

இந்த படம் அதே வருடம் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இதிலும் ஷாலினி தான் கதாநாயகியாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட படங்களிலும் ஷாலினி நடித்துள்ளார்.

அமர்க்களம் படத்தின் போது அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி அதன் பிறகு திரை உலகை விட்டு விலகி இருக்கிறார். பேபி ஷாமிலி 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஓய் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

2 வயசு குழந்தைக்கு தேசிய விருது.. அஞ்சலி படத்தில் மணிரத்னம் மேஜிக்.. ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த அந்த சம்பவம் தான் காரணம்

தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான வீரசிவாஜி திரைப்படத்தில் ஷாமிலி கதாநாயகியாக நடித்திருப்பார். இப்படி சகோதரிகளான இருவரும் திரையுலகை தங்கள் நடிப்பால் அசத்தியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews