45 நிமிடத்தில் 4 ஜாம்பவான்கள் மேடையில் நடத்திய மேஜிக்.. மிரண்டு போன ரசிகர்கள்!

திரைப்படங்களில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்றால் இயக்குநர் அதற்கான கதைக்களத்தினைச் சொல்லி, பின்  இசையமைப்பாளர் மெட்டு போட்டு அதன்பின் பாடலாசிரியர் பாடலை எழுதி, பின்னர் பாடகர்கள் பாடுவது வழக்கம். இதற்கு குறைந்த பட்சம் ஒருநாளாவது ஆகும். ஆனால் சினிமா வராற்றில் ஒரு பாடலானது வெறும் 45 நிமிடங்களில் அதுவும் பொதுமேடையில் பதிவு செய்யப்பட்டது என்றால் ஆச்சர்யமாக உள்ளது அல்லவா?

பிரபல சினிமா பத்திரிக்கையான சினிமாலயாவின் விருது வழங்கும் கலை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்த நேரம். அந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் அந்நிகழ்ச்சியில் திடீரென ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது. அதைக் கேட்டு இவர்கள் நால்வரும் ஷாக் ஆகினர்.

அந்த அறிவிப்பு என்னவென்றால் இப்போது மேடையில் கே. பாலச்சந்தர் ஓர் காட்சி அமைப்பு சொல்ல, அதற்கு எம்.எஸ்.வி. போட, கண்ணதாசன் பாடல் இயற்ற, எஸ்.பி.பி அதைப் பாடுவார் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. நம்மவர்களுக்கு சொல்லியா தரவேண்டும்.

இயக்குநர் சிகரம் அவர்கள் படத்தில் வரும் ஒரு சுச்சுவேஷனைச் சொல்ல, எம்.எஸ்.விஸ்வநாதன் தனது  ஆர்மோனியத்தை எடுத்து மெட்டுப் போட ஆரம்பித்தார். வந்தார் நம் கவியரசர் மளமளவென வரிகளை எழுதிக் கொடுத்தார். அந்த வரிகள் தான்

அங்கும் இங்கும் பாதை உண்டு

நீ எந்தப் பக்கம்

ஞாயிறு உண்டு திங்கள் உண்டு

நீ எந்த நாளோ (அங்கும் இங்கும்)…

ஒய்.ஜி.மகேந்திரனை ஜெயலலிதா இப்படித்தான் கூப்பிடுவாராம்.. இருந்தும் முறிந்த உறவு.. இதனால்தானானா?

என்ற ‘அவர்கள்‘ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இவ்வாறு கண்ணதாசன் எழுதியதும் உடனே எம்.எஸ்.விஸ்வநாதன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்குச் சொல்லிக் கொடுத்து முழு பாடலையும் 45 நிமிடத்தில் பதிவு செய்தார். அங்கிருந்த ரசிகர்கள் மிரண்டு போயினர்.

இவ்வாறு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு பாடலானது 45 நிமிடங்களில் தயாரானது இதுவே முதன்முறையாகத் தான் இருக்கும். இந்த நான்கு ஜாம்பவான்களில் திறமையைக் கண்டு ரசிகர்கள் மெய்மறந்து போயினர். இதுமட்டுமன்றி கவியரசர் கண்ணதாசன் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்காக 10 நிமிடங்களில் எழுதிய பாடல்தான் முத்தான முத்தல்லவோ.. முதிர்ந்து வந்த முத்தல்லவோ.. என்ற பாடலும். இந்தப் பாடலை ஸ்ரீதர் கேட்க ரயிலுக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த கண்ணதாசன் உடனே இதனை இயற்றினார்.

Published by
John

Recent Posts