விளையாட்டு

வேர்ல்ட் கப் என்றாலே அது ஆஸ்திரேலியா தான் போல!! மகளிர் உலகக் கோப்பையை தட்டித் தூக்கிய ஆஸ்திரேலியா!!

நியூசிலாந்து நாட்டில் மகளிருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ,நியூஸிலாந்து. இங்கிலாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் கலந்து கொண்டன.

அதிலும் குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி பலமாக மோதியது. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா மகளிர் அணி உலகக் கோப்பையை தட்டி கைப்பற்றியதாக காணப்படுகிறது.

அதன்படி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. இங்கிலாந்து அணியை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா மகளிர் அணி.

நியூசிலாந்தின் கிரீஸ்சர்ச்சில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து சுமார் 356 ரன்கள் எடுத்தது. 357 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை அடைந்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹேய்லி 170 ரன்களும், ஹேய்ன்ஸ் 68 ரன்களும், மூனி 62 ரன்களும் எடுத்தனர். இதற்கு முன்னதாக நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Vetri P

Recent Posts