வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி..தோல்வி பாதையில் இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிகாகன ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

பின்னர் இரண்டாம் நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 15 ரன்களும், சுக்மான் கில் 13 ரன்களும், புஜாரா,விராட் கோலி தலா 14 ரன்களும் சேர்ந்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு நாள் ஆட்டம் போல் அதிரடியாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 51 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து லயோன் பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி இரண்டாவது ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டும் சேர்த்து உள்ளது.

ரஹானே 29 ரன்கள் எடுத்த நிலையிலும் ஸ்ரீதர் பாரத் 5 ரன்கள் உடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணியை விட 318 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் அந்த அணியின் பந்துவீச்சை சமாளித்து இந்திய அணி வீரர்கள் ரன் குவிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே முக்கியத்துவம் மிக்க இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்காததற்கு கங்குலி, ரிக்கி பாண்டிங் போன்ற முன்னணி வீரர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

வீடியோ கேம்ஸ் மூலம் இளைஞர்களை மதமாற்றம் செய்யும் கும்பல்.. அதிர்ச்சி தகவல்..!

ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய பந்து விச்சு பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.

Published by
Velmurugan

Recent Posts