அத்திவரதர் தரிசனம் தரும் நேரம் மாறிவிட்டதென உங்களுக்கு தெரியுமா?!


அத்திவரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள் காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப்பெருமாள் கோவில் ’அனந்த சரஸ்’ திருக்குளத்தில் பள்ளிக்கொண்டிருக்கிறார் முழுதும் அத்திமரத்தாலான பள்ளிக்கொண்ட பெருமாளின் நீண்ட நெடிய உருவம், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீஅத்திவரதரின் திருவுருவச்சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து ஒரு மண்டல காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப்பெரும்பேறு. ஆகையால், மாவட்டம், மாநிலம் மட்டுமில்லாமல் அயல்நாடுகளிலிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிக்கின்றனர். வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து நிறுத்தம், மருத்துவ முகாம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ளன.

தினத்துக்கு சராசரியாய் ஒரு லட்சம் பக்தர்கள் நீண்டிருக்கும் வரிசையில் பலமணிநேர காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக, மேலும் சில நேரங்களுக்கு அத்திவரதரின் தரிசனம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதன் விவரம் கீழ்வருமாறு..

நாள்-கிழமை/அத்திவரதர் தரிசனநேரம்/உற்சவ விபரம்

10.07.2019 புதன் கிழமை / காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை / கோடை உற்சவம் 

11.07.2019 வியாழக்கிழமை / காலை 5 மணி முதல் / பிற்பகல் 4 மணி வரை / ஆனி கருடன் 

12.07.2019 வெள்ளிக்கிழமை / காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை / எதுவும் இல்லை 

13.07.2019 சனிக்கிழமை / காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை / நாத முனிகள் 

14.07.2019 முதல் 24.07.2019 வரை (ஞாயிறு முதல் புதன் வரை) காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை – எந்த உற்சவ நிகழ்வும் இல்லை 

25.07.2019 முதல் 02.08.2019 வரை (வியாழன் முதல் வெள்ளி வரை) காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திரு ஆடிபூரம் (9 நாட்கள்) 

03.08.2019 முதல் 04.08.2019 வரை (சனி முதல் ஞாயிறு வரை) காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 
திரு ஆடிபூரம் கல்யாணம் 


13.08.2019 செவ்வாய் கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆளவந்தார் சாற்றுமுறை 

15.08.2019 வியாழக்கிழமை காலை 5 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை ஆடி கருடன் 

16.08.2019 வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 

17.08.2019 சனிக்கிழமை காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை அத்திவரதர் வைபவம் நிறைவு 

இன்றைய நிலவரப்படி காலை 5 மணி முதல் இரவு பத்து மணிவரை இந்த கால அட்டவணைப்படியே அத்திவரதரின் தரிசனம் பக்தர்களுக்கு கிட்டும். கோவில் நிர்வாகத்தினரால் இந்த கால அட்டவனை மாறுதலுக்குட்பட நேரலாம்…..

Published by
Staff

Recent Posts