அட்சய திருதியை அன்று ஏன் தங்கம் வாங்குகிறார்கள்?

மஹாலக்ஷ்மி மிகவும் விரும்பி வசிக்கும் இடம் தங்கமாகும். அதனால் தான் பெண்களை ஏதேனும் தங்கம் ஆபரணம் அணிந்து இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் அறிவுறுத்தினார்கள். தங்கமானது தன்னம்பிக்கை மற்றும் புனிதத் தன்மையை தருவதாக சொல்லி இருக்கின்றனர்.

தங்கத்தில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கின்ற காரணத்தால் தான் அதனை கால்களில் அணிகலன்களாக அணிய கூடாது என்று சொல்லி இருந்தார்கள். கால்களில் அணியும் கொலுசு, மெட்டி போன்றவற்றை தங்கத்தை தவிர்த்து விட வேண்டும். கொலுசு, மெட்டி போன்றவை வெள்ளியில் தான் செய்து அணிய வேண்டும்.

இடுப்பில் தங்க ஆபரணங்கள் அணியலாம். ஒரு சிலர் அளவிற்கு அதிகமான தங்கத்தை அணிந்து கொள்வார்கள். தங்க ஆபரணங்களை அணிவதற்கு விதிமுறை இருக்கின்றது. உதாரணத்திற்கு கம்மல் போடும் காதில் ஆறு வகையான ஆபரணங்கள் அணிய வேண்டும் என்ற விதி இருக்கின்றது. அதன் மூலம் உடலில் அக்குபஞ்சர் முறையில் ஆரோக்கியம் உண்டாகும். நமது முன்னோர்கள் எங்கு ஆபரணங்களை அணிந்தால் உடலுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

akshaya tritiya

சங்க கால நூல்களில் தங்கத்தை அணிவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி அழகாக எழுதி உள்ளார்கள். இயற்கையாகவே தங்கத்திற்கு உறுதி தன்மை இருப்பதால் அது உடலோடு அணிவதன் மூலம் நமக்கு மனம் பலம் உண்டாகுமாம்.

தங்கத்திற்கு தெய்வீக தன்மை இருக்கிறது. இதனை நீங்கள் தங்கம் மோதிரம் அல்லது செயின் அணிந்து இருந்தால் உங்களுக்கு அதன் தன்மை பற்றி புலப்படும். அதனால் தான் நமது முன்னோர்கள் தாலியை தங்கத்தில் செய்தார்கள்.

அட்சய திருதியை மஹாலட்சுமிக்கு உகந்த நாளாக இருக்கிறது. எனவே அந்த திருநாளில் தங்கம் வாங்கினால் நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்கும்.

அட்சய திருதியை 2023 தேதி

அட்சய திருதியை 2023, ஏப்ரல் மாதம் 22, 23-ம் தேதி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews