அஷ்ட லட்சுமிகள் நம் உடலில் எங்கெங்கு இருக்கின்றனர் என தெரியுமா?!


1ca6d882c99a2d5a2a2e2b9f6b9d52a3

அழகா இருக்கும் பெண்ணை மகாலட்சுமி போல் இருக்கிறாள் என சொல்வார்கள். ஆனால், ஆண், பெண்ணென பேதமின்றி அனைவரின் உடலிலும் மகாலட்சுமி குடியிருக்கிறாள் என சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். செல்வத்தை தரும் மகாலட்சுமி மட்டுமல்லாமல் அஷ்டலட்சுமிகளும் நம் உடலில் குடி இருக்கிறார்கள். மகாலட்சுமி மட்டுமில்லாமல்

எந்தெந்த லட்சுமி, எந்தெந்த பாகங்களில் இருக்கிறாள் எனப் பார்க்கலாம்…

ஆதிலட்சுமி நம் பாதங்களில் வசிக்கிறாள் . நம் பாதம் பிறர்மீது தெரியாமல் பட்டால் சிவ சிவ எனக்கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிடில் ஆதிலஷ்மி நம்மை விட்டு விலகி விடுவாள் என்பது ஐதீகம்.

c1a5a25684903b6d9cb55d0614ad9649

கஜலஷ்மி நம் முழங்கால் பகுதியில் வசிக்கிறாள் . அதனால்தான் காலை நீட்டியபடி படிக்க, சாப்பிடக்கூடாதென முன்னோர்கள் சொல்வர். காலை நீட்டியபடி புத்தகம் படிப்பதாலும் நெல் .. அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு கஜலட்சுமி விலகுகிறாள்..!!

வீர்ய லட்சுமி நம் இடுப்புக்கு கீழ் பகுதியில்
வசிக்கிறாள். பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த வீர்யலஷ்மி விலகுகிறாள்.

நம் இடது தொடையில் வசிப்பவள் விஜயலஷ்மி. இடது தொடை எப்போதும் மனைவி/கணவனுக்குச் சொந்தம். எனவே
மனைவி/கணவனை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த விஜயலக்ஷ்மி விலகி விடுவாள்.

e0b3b83c941e758f8837aa04eb909efa

வலது தொடையில் வசிப்பவள் சந்தானலஷ்மி. பெற்றோர்கள் கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும்.
இடது தொடையிலோ இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த *சந்தானலஷ்மி* விலகி விடுவாள்.

தான்யலஷ்மி நமது வயிற்றுப் பகுதியில் வசிக்கிறாள். எச்சில் உணவு, ஊசிப்போன உணவு இவைகளை ஏழைகளுக்கோ, பிறருக்கோ கொடுத்தால் தான்ய லட்சுமி விலகி விடுவாள்.

தைரியலஷ்மி நமது நெஞ்சுப் பகுதியில் வசிக்கிறாள் . நெஞ்சிலே நஞ்சை வைத்து பிறரைக் குறைக்கூறி குடும்பத்தை கெடுப்பவர்களை, நெஞ்சறிய பொய் சொல்பவர்களை விட்டு தைரிய லட்சுமி விலகுகிறாள்.

வித்யாலஷ்மி நமது கழுத்துப் பகுதியில் வசிக்கிறாள் . கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும், பூணூல், தாலி என குடும்ப பராம்பரிய சின்னத்தை
அணியாதவர்களை விட்டு வித்யா லட்சுமி விலகுவாள்.

b262340c69e8f647a1de47c014c81642

செளபாக்யலஷ்மி நம் நெற்றியின் மத்தியில் வசிக்கிறாள் . இவள் நம் புருவத்தை சிரைப்பதாலும், குங்குமம் வைக்காதவர்களையும் , வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும் வீபூதி, நாமம் என அவரவர் சின்னத்தை அணியாவிட்டாலும் நம்மை விட்டு சௌபாக்ய லட்சுமி விலகுகிறாள்..

பல தவறுகள் செய்து நம் அங்கத்தில் இருக்கும் லஷ்மி களை விரட்டி விட்டால் நாம் எப்படி செழிப்பாக வாழ முடியும்.? அதனால் கவனமுடன் பெரியோர் வகுத்த நியதிப்படி வாழ்வோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews