என்.எஸ்.கிருஷ்ணணுக்கு கதை எழுத மறுத்த அறிஞர் அண்ணா.. இதான் காரணமா?

காமெடி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாராண மனிதராகத் திகழ்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். யாரையும் உருவ கேலி செய்யாது, டபுள் மீனிங் வசனங்கள் இல்லாது, மற்றவர்களை புன்படுத்ததாது தனது காமெடிக் காட்சிகளில் வெறும் சிரிப்பினை மட்டும் கொடுக்காமல் சமூக கருத்துக்களையும் கூறி சிந்திக்க வைத்தவர். இவரது பாணியைப் பின்பற்றியே நடிகர் விவேக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் காமெடிக் காட்சிகளில் நடித்ததால் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டார்.

நாடகத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணன் ராஜா தேசிங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து தங்க பதுமை, பாரிஜாதம், பூம்பாவை போன்ற வெற்றிப் படங்களின் மூலம் தனது காமெடிகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

எம்.ஜி.ஆரை வைத்து இவர் தயாரித்த படம் தான் ‘பைத்தியக்காரன்’. ஆனால் அதன்பின் தனது அடுத்த படம் குறித்து தனது குழுவிடம் விவாதிக்கையில் ‘நீங்கள் அடுத்ததாக தயாரிக்கும் திரைப்படத்தில் நீங்களே கதாநாயகனாக நடியுங்கள்’ என்ற ஆலோசனையை இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு கூறியுள்ளார். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணனோ வேண்டாம் நான் நாயகனாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூற கிருஷ்ணன் பஞ்சு ஒருவழியாக அவரைச் சம்மதிக்க வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட போது ஏற்பட்ட உச்சகட்ட பரபரப்பு… மீண்டும் சினிமாவில் இயல்பு நிலையை கொண்டு வந்த பூதம் படம்

அதன்படி இவர் நடிக்கும் படத்திற்கு கதை எழுத இவர் சி.என்.அண்ணாதுரையை தேர்வு செய்தாராம். அறிஞர் அண்ணாவும் இப்படத்திற்கு கதை எழுத சம்மதித்து இவர்களின் காம்போவில் உருவான படம்தான் நல்ல தம்பி. 1949-ல் வெளியான இந்தப் படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன், வி.எஸ்.சகஸ்ரநாமம், பானுமதி, எம்.என்.ராஜம், மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர். மிஸ்டர் டீட் கோஸ்டு டவுன் என்ற ஹாலிவுட் படத்தினைத் தழுவி நல்ல தம்பி உருவாக்கப்பட்டிருந்தது.

கதை எழுதிய அறிஞர் அண்ணாவிற்கு இப்படத்தின் கதையில் அவ்வளவு திருப்தி ஏற்படவில்லையாம். ஏனென்றால் கலைவாணர் இப்படத்தின் கதையில் இடையில் தனது நாடகத்தின் கதைகளையும் புகுத்தினாராம். இந்தச் செயலால் கோபமுற்ற அறிஞர் அண்ணா கலைவாணர் தனது அடுத்த படத்திற்கு கதை எழுத அழைத்தபோது அதை மறுத்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...