அஜித், அரவிந்த் சாமி இணைந்து நடித்த ஒரே படம்.. அஜித்துக்கு இதுல டப்பிங் குரல் கொடுத்தது இந்த பிரபல நடிகரா?

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடித்து வந்த அரவிந்த் சாமியை பார்த்து இப்படியும் அழகான ஒரு நடிகரா என பல பெண்களும் ஜொள்ளு விட்டு வந்தனர். ரஜினி, மம்மூட்டி ஆகியோர் இணைந்து நடித்த தளபதி திரைப்படத்தில், கலெக்டர் கதாபாத்திரத்தில் அறிமுகமான அரவிந்த்சாமி, அதன் பின்னர் ரோஜா திரைப்படத்தில் முன்னணி கதாநாயகராக நடித்திருந்தார்.

முதல் இரண்டு படங்களும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கக் கிடைத்திருந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட அரவிந்த் சாமி, அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்திருந்தார். பாம்பே, என் சுவாச காற்றே என 1990 களின் இறுதியில் எக்கச்சக்க திரைப்படங்கள் நடித்து தனக்கென பெண்கள் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார் அரவிந்த்சாமி. ஆனால், 2006க்கு பின்னர் சில ஆண்டுகள் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

அப்படி இருக்கையில் தான் கடல் திரைப்படத்தில் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு ரீஎன்ட்ரி கொடுத்தார் அரவிந்த் சாமி. இதனைத் தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுத்திருந்தார். இன்று வரையிலும் தமிழ் சினிமாவில் வில்லனுக்காக புது இலக்கணம் வரைந்ததாக பலரும் வியப்புடன் பார்த்து வரும் ஒரு கதாபாத்திரம் தான் அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டர்.

சுமார் 53 வயதாகும் நடிகர் அரவிந்த்சாமி, தற்போதும் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராகவும் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு இன்னும் இளமையாக அரவிந்த்சாமி இருப்பதால் அவர் முன்னணி நடிகராக இருப்பதும் அவருக்கு பொருந்தி தான் போகிறது.

இந்த நிலையில், அரவிந்த்சாமி மற்றும் அஜித்குமார் ஆகியோர் இருவரும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படத்தை பற்றி தற்போது காணலாம். சுரேஷ் சந்திர மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி மற்றும் ரேவதி ஆகியோர் நடித்த திரைப்படம் தான் பாசமலர்கள்.

அமராவதி என்ற திரைப்படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமாகி இருந்த அஜித், விளம்பர படங்களில் நடித்திருந்த நிலையில் தான் பாசமலர்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. ஒரு சில நிமிடமே இந்த திரைப்படத்தில் அஜித் குமார் தோன்றியிருந்த நிலையில் அவருக்கு தற்போது பிரபல நடிகராக இருக்கும் விக்ரம் தான் டப்பிங் பேசியிருந்தார்.

மேலும் அஜித்தின் அமராவதி படத்திலும் அவருக்கு டப்பிங் பேசி இருந்தது நடிகர் விக்ரம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...