குருவாயூர் கோயிலில் களைகட்டிய நடிகை அபர்ணா தாஸ் திருமணம்!.. மஞ்சுமெல் பாய்ஸ் நடிகரை மணந்தார்!..

பீஸ்ட் மற்றும் டாடா படங்களில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல் என்பவரை இன்று காலை குருவாயூர் திருக்கோயிலில் திருமணம் செய்துகொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

அபர்ணா தாஸ் திருமணம்:

மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான ஞான் பிரகாஷன் படத்தில் நடிக்க ஆரம்பித்த அபர்ணா தாஸ் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஐடே, செல்வராகவன், யோகி பாபு, வி டிவி கணேஷ் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்து இருந்தனர். அந்த படத்தில் நடித்த தமிழில் அறிமுகமான அபர்ணா தாசுக்கு அடுத்ததாக கவின் நடிப்பில் வெளியான நாடா படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

aparna mar 1

கடந்த ஆண்டு கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா படத்தில் அபர்ணா தாஸ் நடித்த நடிப்பை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் மீது விருப்பம் கொள்ள ஆரம்பித்தனர். தமிழ் மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அபர்ணா தாஸ் தற்போது மஞ்சுமெல் பாய்ஸ், கன்னூர் ஸ்குவாட், காசர் கோல்ட், வர்ஷங்களுக்கு சேஷம் என பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த தீபக் பரம்போலை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

கடந்த இரு தினங்களாக தனது ஹல்தி நிகழ்ச்சி, சங்கீத் நிகழ்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களைப் பெற்று வந்த அபர்ணா தாஸ் இன்று குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் தனது திருமணத்தை நடத்திக் கொண்டார். அதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

சினிமா பிரபலங்கள் அதிக அளவில் பங்கேற்காமல் குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தனியாக வரவேற்பு நிகழ்ச்சியை வைத்து பிரபலங்களுக்கு விருந்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகும் அபர்ணா தாஸ் நடிப்பேன் என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...