மொய் விருந்தில் தாலியை வைத்த சின்னக் கவுண்டர்.. ’அந்த வானத்தைப் போல..’ பாடல் உருவான தருணம்!

அதிரடியிலும், ஆக்சனிலும் கலந்து சுழன்றடித்த கேப்டன் விஜயகாந்தின் இமேஜை மாற்றிய படங்கள் இரண்டு. ஒன்று வைதேகி காத்திருந்தாள், மற்றொன்று சின்னக் கவுண்டர். காதலிக்காக உருகித் தவிக்கும் கதாபாத்திரத்தில் வெள்ளைச்சாமியை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறந்து தான் வரவேண்டும். அதேபோல் சின்னக்கவுண்டர் படம். விஜயகாந்தின் கேரியரை தமிழ்சினிமாவிலும் மக்கள் மத்தியிலும் உயர்ந்தவராக உயர்த்திய படம்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரையும் செதுக்கி இருந்தார். படத்தில் மனோரமாவின் உயிரை சுகன்யா காப்பாற்றுவது போல் ஒரு சீன் இருக்கும். அப்படி உயிரைக் காப்பாற்றிய சுகன்யாவுக்கு விஜயகாந்த் ஒரு தட்டில் வெத்தலைப்பாக்கு, பழங்களுடன் சேலையுடன் பத்தாயிரம் ரூபாயையும் வைத்து சுகன்யாவிடம் கொடுப்பார்.

அப்போது அவர் கேட்பார். ‘ஐயா நீங்க இந்த ஊருக்கே பஞ்சாயத்து பண்ணுற பெரியவரு. உங்க ஆத்தாவோட உசுருக்கு 10 ஆயிரம் ரூபா தானா. இது என்ன மரியாதை?’ன்னு கேட்ட உடனே விஜயகாந்துக்கு தீ சுடுவது போல் ஆகிடும். அப்புறம் அவரே சொல்வார். ‘இந்த 10 ஆயிரம் ரூபாயை நான் உங்களுக்கேத் தர்றேன். என் ஆத்தாவோட உசுர தர முடியுமா?’ன்னு கேட்பார். அந்த கேள்வியில் உடைந்து போகும் கேப்டன் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்கிறார்.

பல ஹிட் பாடல்களைக் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி.. இதெல்லாம் இவங்க பாடியதா?

அப்படி உருவானதுதான் சொல்லால் அடித்த சுந்தரி பாடல்.. அப்போது கூட தன்மானத்தோட காசுக்காக பலியாகும் கேரக்டர் அவள் அல்ல. அவள் வீட்டுக்கு மொய்விருந்து வைத்து அதன் மூலமா வரும் காசை சேர்த்து கடனை அடைக்கணும். அந்த விருந்துக்குக் கூட விஜயகாந்தை தன்மானம் கருதி அழைக்க மாட்டார் சுகன்யா.

அவர் அழைக்காமலும் அங்கு செல்லும் கேப்டன் அவரது வீட்டில் சாப்பிட்டு விட்டு இலைக்கு அடியில் மொய் வைப்பதற்குப் பதில் தாலியை வைத்து விடுகிறார். தன் ஆத்தாவோட உயிரைக் காப்பாற்றியவளை விட உலகத்தில் உயர்ந்தவள் இருக்க முடியாது என்பது தான் அதன் அர்த்தம்.

அவளுக்காகப் பணம் கொடுத்துக் கேவலப்படுத்தி விட்டோமே… தாலியையேக் கொடுத்து விடுவோம் என்று தான் இப்படி வைக்கிறார் கேப்டன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தென்னை ஓலைகளுக்கு இடையே உள்ள ஓட்டையில் அவளுடைய கஷ்டத்தைக் கைகழுவுற மாதிரி ஒரு சீன்.

அந்தக் காட்சியில் விஜயகாந்தின் மனசு அந்த வானத்தைப் போல உயர்ந்து நிற்கிறது. இதை விட பெரிய மனசு உள்ளவன் யாரும் கிடையாது. என இயக்குநர் கூற இளையராஜா போட்ட டியூன்தான்
அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே
பனித்துளியைப் போல குணம் படைச்ச தென்னவனே..
இப்படி உருவானதுதான் இந்தப் பாடல்.

இப்போது அவரது இறுதி அஞ்சலியின்போதும் அனைத்து மீடியாக்களும் இந்தப் பாடலை ஒலிபரப்பத் தவறவில்லை.

Published by
John

Recent Posts