அங்காடி தெரு படத்திற்குப் பின்னால் இப்படி ஒரு உழைப்பா? தி.நகரில் ஷூட்டிங் எடுத்த சீக்ரெட்

நாம் அன்றாடம் பிரமாண்ட குளு குளு ஏசி ஷோரூமில் ஷாப்பிங் செய்யும் பெரிய பெரிய கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் இருண்ட பக்கங்களை தோலுரித்துக் காட்டிய படம் அங்காடித் தெரு. 2010-ல் வெளிவந்த இந்தப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியிருந்தார். இயக்குனர் ஷங்கரின் உத்வியாளராக இருந்து வெயில் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ், பாண்டி ஆகியோர் அங்காடி தெரு படத்தில் நடித்திருந்தனர். சினேகா ஒரு காட்சியில் வந்து செல்வார். தி.நகர் ரங்கநாதன் தெருவை பற்றிய ஓர் ஆவண படமாகவும் இது அமைந்திருந்தது. ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் விஜய் ஆன்டனி ஆகியோர் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தனர். படம் வெளியாகி மக்களிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.

ஒரு பெரிய ஜவுளி கடையில் விற்பனையாளர்களாக பணிபுரியும் அஞ்சலி, மகேஷ் இடையில் நடக்கும் மோதல், அதன் பின் அவர்களுக்குள் ஏற்படும் காதல் போன்றவற்றை மையமாகக் கொண்டும் ரங்கநாதன் தெரு சிறு வியாபாரிகள் நிலைமையையும் இந்தப் படம் தோலுரித்தது. இந்த படத்தை எடுக்கும் போது பெரிய ஜவுளி கடையில் படம் எடுப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லையாம். அதன்பின் ஒரு பிரமாண்ட கடையில் இரவு நேர ஷூட்டிங்க்கு அனுமதி கிடைத்ததாம்.

ஐஸ்வர்யா ராயை பாட்டில் வம்புக்கு இழுத்த வைரமுத்து.. கவிஞருக்கு எவ்ளோ குசும்பு பார்த்தீங்களா?

எனவே பகல் முழுதும் பரபரப்பாக காணப்படும் கடை இரவு நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட் ஆக மாறிவிடுமாம். இரவு 10 மணிக்கு மேல் ஷூட்டிங் ஆரம்பித்து மறுநாள் காலை 7.00 மணி வரை இடைவிடாது ஷூட்டிங் நடக்குமாம். மேலும் சென்னையின் ஷாப்பிங் தெருவாக விளங்கும் ரங்கநாதன் தெருவில் ஷூட்டிங் எடுக்க மிகுந்த சிரமப்பட்டதாம் அங்காடி தெரு படக்குழு.
பின்னர் ரங்கநாதன் தெருவில் எப்படி ஷூட்டிங் எடுக்கலாம் என படக்குழு யோசித்த போது படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு யோசனை சொல்லி இருக்கிறார். அவர் சுமை தூக்கும் தொழிலாளர் போல வேடம் அணிந்து சாக்கு மூட்டைக்குள் கேமராவை மறைத்து வைத்து லென்ஸ்க்கு மட்டும் துளை ஏற்படுத்தி ரங்கநாதன் தெரு முழுவதும் அங்குமிங்கும் அலைந்து ஷூட்டிங் எடுத்துள்ளனர்.

மேலும் சிறிய டாடா ACE வாகனத்தில் பழ பெட்டிகள் போன்று அடுக்கி வைத்து அதில் கேமரா வைத்து ஷூட்டிங் எடுத்துள்ளனர். இவ்வாறு பல சிரமத்திற்கு இடையே அங்காடி தெரு படப் பிடிப்பு நடத்தப்பட்டது. இவ்வளவு சிரமங்களுக்கு இடையே எடுக்கப்பட்ட அங்காடித்தெரு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அங்காடித் தெரு படம் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...