இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அமேசான்.. அதிர்ச்சி தகவல்..!

அமேசான் நிறுவனம் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி செய்துள்ள நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். பொருளாதார மந்த நிலை, கரன்சி மதிப்புகளின் உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் பெரிய நிறுவனங்களுக்கு லாபம் குறைந்ததை அடுத்து பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது மேலும் 500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இந்தியர்கள் தான் அதிகம் என்று கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் வலை சேவைகள் (AWS), மனித வளங்கள் மற்றும் சில பிரிவுகளில் அமேசான் இந்தியாவில் சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமேசான் சி.இ.ஓ ஆண்டி ஜெஸ்ஸி கூறியபோது, ‘எங்கள் நிறுவனத்தின் மறுசீரமைப்பு, நீண்ட கால வளர்ச்சி மற்றும் வெற்றிக்காக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், நிறுவனத்தின் முன்னேற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வால்மார்ட் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இதர ஈ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து அமேசான் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Bala S

Recent Posts