வாடிவாசல் வர வாய்ப்பில்லை?.. அந்த படத்தையாவது ரீ ரிலீஸ் பண்ணலாம்.. தவிப்பில் தாணு!..

கபாலி படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ரொம்பவே நம்பிக்கையுடன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த நானே வருவேன் படத்தை நம்பி பணத்தை போட்டார். ஆனால், ஒரு நாள் கூட சரியாக ஓடாமல் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

பல ஆண்டுகளாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை எடுத்து விடலாம் என்கிற கனவில் இருந்து வரும் தயாரிப்பாளர் தாணுவுக்கு வெற்றிமாறன் ஒரு பக்கமும், சூர்யா இன்னொரு பக்கமும் கயிற்றை இழுத்துக் கொண்டே சென்று ஆட்டம் காட்டி வருகின்றனர்.

வாடிவாசல் என்ன ஆச்சு?

வெற்றிமாறன் விடுதலை படத்தை 2 பாகங்களாக எடுக்க முடிவு செய்து 2வது பாகத்தின் வேலைகளை இன்னமும் முடிக்காத நிலையில், சூர்யா கங்குவா, இந்தியில் சூரரைப் போற்று, புறநானூறு, ரோலக்ஸ் என அடுத்தடுத்து படங்களில் பிசியாகி வருகிறார்.

இந்நிலையில், கலைப்புலி எஸ். தாணு நானே வருவேன் படம் உருவாக மூலக் காரணமாக இருந்த கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தை மீண்டும் புதுப்பொழிவுடன் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ் நடித்த வேட்டையாடு விளையாடு மீண்டும் திரையிடப்பட்டு வசூல் வேட்டை நடத்தியதை அறிந்த கலைப்புலி எஸ். தாணு கமல் பிறந்தநாளை முன்னிட்டு ஆளவந்தான் படத்தை வெளியிடாமல், ரஜினிகாந்த் பிறந்தநாளே அடுத்து வரப்போகிறது. இந்த சூழலில் அந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

மீண்டும் ஆளவந்தான்

ஆளவந்தான் வந்த புதிதில் அந்த படத்தை ரசிகர்கள் ரசிக்காமல் நல்லா இல்லை என ஓடவிடாமல் செய்து விட்டனர். இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து ஆளவந்தான் படத்தை சுமார் 1000 திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆளவந்தான் படம் ரிலீஸ் ஆகி 22 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கூடிய விரைவில் தியேட்டர்களில் புத்தம் புது பொழிவுடன் ஆளவந்தான் படம் வெளியாக போகிறது. மேலும், கமல்ஹாசனின் பேசும் படம் உள்ளிட்ட சில படங்களும் ரீ ரிலீஸுக்கு தயாராகி உள்ளன.

புதிதாக ரிலீஸ் ஆகவே இந்தியன் 2, எச். வினோத் இயக்கத்தில் ஒரு படம், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப், இந்தியன் 3, கல்கி என வரிசையாக பல படங்கள் காத்திருக்கின்றன.

மேலும், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் உடன் இணைந்தும் கமல்ஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...