அகலிகைக்கும் தொட்டாற்சிணுங்கி செடிக்கும் என்ன சம்பந்தம்?!


கணவன் உருக்கொண்டு வந்த இந்திரனோடு, கணவன் என எண்ணி உறவுக்கொண்டமைக்காக கணவன் விட்ட சாபத்தினால் கல்லாய் போனாள் அகலிகை. பல ஆயிரம் ஆண்டுகாலம் கழித்து அவ்வழியாய் வந்த ராமனின் காலடி பட்டு சாப விமோசனம் அடைந்து, புனிதத்தன்மை கொண்டு மீண்டு கணவனோடு சென்றாள். இதையெல்லாம் கவனித்த ஒரு புல் ராமனை அழைத்தது.

ராமா! .. அகலிகை தவறு செய்தாள், சாபம் பெற்றாள். நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் இந்த கல்லாய் போன அகலிகையின் அடியில் மாட்டி இத்தனை வருடம் வளர்ச்சி இன்றி கிடக்கிறேன்? எனக்கு பதில் சொல் ராமா” என்று ராமனது கால்விரலை பிடித்து இழுத்தது புல்.

உடனே ராமன், “அன்று என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா? சொல்” என்றார்.

“இந்திரன் வந்து கோழி போல் கூவினான். விடிந்து விட்டது என்று கௌதமர் நீராட போனார். உடனே இந்திரன் கௌதமர் உருவில் மாறி, அகலிகையை அழைத்தான். அவளை அணைத்தான். அகலிகை புறியாது விழித்தாள். கௌதமன் சத்தம் கேட்டதும் இந்திரன் ஓடிவிட்டான். தொட்டது யார் என்று தெரியவில்லையா உனக்கு என்று கோவம் கொண்ட கௌதமன் அகலிகையை கல்லாய் போக சபித்தான்” என்று சொல்லி முடித்தது புல்.


ராமன் “என் விரலை பிடித்து இழுக்க முடிந்த உன்னால் அன்று கௌதமனை நீராட போகாமல் தடுக்க முடியவில்லையா?? தவறான எண்ணம் கொண்ட இந்திரனை வீழ்த்த முடியவில்லையா?? உன் கண்முன் குற்றம் நடந்தும் பார்த்து மவுனமாய் இருந்ததுக்கான தண்டனைதான் இக்கோலம். என்னை போக விடு” என்று அம்பால் நீக்கினார். புல் சுருங்கிற்று. அன்றுமுதல் இன்றுவரை யார் தொட்டாலும் ராமனோ என்று எண்ணி வெட்கத்தால் குவியுமாம் தொட்டாற்சிணுங்கி.

இதுதான் தொட்டாற்சிணுங்கியின் கதை. தவறு செய்பவனால் மட்டுமல்ல, தவறினை தட்டிக்கேட்காத நல்லவனாலுகூட இந்த சமூதாயம் பாழ்படும் என்பதை உணர்ந்து நல்லதொரு சமுதாயத்தை படைப்போம்!!

Published by
Staff

Recent Posts