பொழுதுபோக்கு

விடாமுயற்சி பட ஷூட்டிங் தாமதம் ஏன்? அஜித் தரப்பில் இருந்து கசிந்த அப்டேட்!

அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்குமார், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களின் இமாலய வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் பலத்த எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

துணிவு படத்தினை அடுத்து அஜித், விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் பட்ஜெட் கட்டுக்குள் இருக்கும் வகையில் திட்டம் தீட்டி படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் சேட்டிலைட், ஆடியோ மற்றும் ஓடிடி உரிமைகள் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சண்டிகர் மற்றும் புனே நகரங்களில் நடக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சூழலில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதி வாரத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
Pichaimuthu

Recent Posts