பொழுதுபோக்கு

துணிவு படம் போரா? ஜோரா?… அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை விஜய், அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் என்றாலும் சரி, தீபாவளி என்றாலும் சரி அவங்களோட ஆஸ்தான நாயகர்களான தல, தளபதியோட படம் ரிலீஸ் ஆன மட்டும் தான் அது பண்டிகையாவே களைக்கட்டும். அதுவும் இரண்டு நாயர்களின் படமும் ஒரே தேதியில் வெளியானால் சொல்லவா வேணும். எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்குன்னு விஜய் ஃபேன்ஸும், போடுறா வெடியான்னு அஜித் ஃபேன்ஸும் கொண்டாடி தீப்பாங்க.

இந்த மாதிரி சம்பவம் 2014யில நடந்துச்சி, அஜித்தோட ‘வீரம்’ மூவியும், விஜய்யோட ‘ஜில்லா’ மூவியும், பொங்கல் ஸ்பெஷலா ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆச்சி. இதுல ரெண்டுமே பேமிலி சென்டிமெண்ட் ப்ள்ஸ் ஆக்‌ஷன்னாலும், வீரம் தான் வசூல் அண்ட் ரிவ்யூ வைஸ் ஹிட்டாச்சுன்னு சொல்லலாம்.

இப்போ 9 வருஷம் கழிச்சி தளபதி நடிச்ச வாரிசு படமும், தல நடிச்ச துணிவு படமும் பொங்கல் ஸ்பெஷலா ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகப்போகுது. இரண்டு படமும் ஒண்ணா ரிலீஸ் ஆகி வருஷம் ஒன்பது ஆனாலும், இன்னம் அவங்க ரசிகர்களோட வேகம் குறையலைன்னு தாங்க சொல்லனும். அந்த வகையில் ரசிகர்களோட மிகுந்த எதிர்பார்ப்போட வெளியாகி இருக்குற துணிவு படத்தோட ட்விட்டர் விமர்சனம் குறித்து பார்க்கலாம்…

டிவிட்டர் ரிவியூ இதோ:

அஜித் உடைய கேரியரிலேயே அவரோட நெகட்டீவ் ரோல் படங்கள் எப்பவுமே செம்ம ஹிட்டாகுறது வழக்கம் அந்த வகையில் அவர் நடிச்சி வெளியான மங்காத்தா படம் ரசிகர்களிடையே மாஸான வரவேற்பை பெற்றதோட சூப்பர் டூப்பர் ஹிட்டும் ஆனதும். அந்த வகையில் மங்காத்தாவிற்கு பிறகு மாஸான தல அஜித்தை ஹெச். வினோத் துணிவு படத்துல கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியிருக்குறதா ரசிகர்கள் தெரிவிச்சியிருக்காங்க.

முதல் மற்றும் இரண்டாம் பாதியில் சண்டை காட்சிகள் தீயாய் இருப்பதாகவும், அஜித்தின் அறிமுக காட்சி, இன்ட்ரோ சாங் எல்லாம் வேற லெவலுக்கு வெறித்தனமாக இருப்பதாகவும் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

கே.ஜி.எஃப், பாகுபலி படத்தை எல்லாம் பின்னுக்குத் தள்ளுற அளவுக்கு துணிவு படம் ஆக்‌ஷன்ல பட்டையைக் கிளப்பியிருக்குறதா? அஜித் ரசிகர் ஒருவர் சொல்லியிருக்காரு.

துணிவு படத்தின் பர்ஸ்ட் ஆஃப், செகன்ட் ஆஃப் இரண்டுமே சீரான வேகத்தில் செல்வதால் படம் விறுவிறுப்பாக நகர்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் தரப்பில் இருந்து துணிவு படத்தை ஆஹா… ஓஹோ… என கொண்டாடினாலும், விமர்சகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்கள் எழாமல் இல்லை.

படத்தில் நிறைய சின்னப்புள்ளத் தனமான டைலாக் மற்றும் சீன்கள் இருப்பதாகவும், முதல் பாதி சுமாராகவும், இரண்டாம் பாதியில் வரும் கொள்ளை சம்பந்தமான காட்சிகள் விறுவிறுப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by
Amaravathi

Recent Posts