துணிவு படத்தின் ஜில்லா..ஜில்லா பாடலுக்காக தனது ஆட்டத்தை ஆரமித்த அஜித்! மாஸ் அப்டேட்!

அஜித் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர காத்திருக்கும் திரைப்படம் துணிவு , இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது.

சில்லா சில்லா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் ஒரு பேட்டியில் பேசிய அனிருத், இந்த பாடல் தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக இருக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் பைத்தியம் பிடிக்கும் என்றும் கூறுகிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் சஞ்சய் தத், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வாங்கி கொள்ளை மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கு வருவதாக, படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சில்லா சில்லா பாடல் குறித்து மாஸான புதிய போஸ்டர் வெளியானது. இந்த அப்டேட்டை ரசிகர்கள் வைரலாகி வந்தனர்.

சமீபத்தில் தான் படத்துக்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையின் படத்தில் அஜித்தின் என்ரோடக்சன் பாடலான ‘சில்லா..சில்லா’ பாடலின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது, இதில் அஜித் கலந்துகொண்டு நடனம் ஆட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

பாபா திரைப்படம் மீண்டும் திரையிலா? ஜெயிலருக்கு முன் மாஸ் காட்ட தயாராகும் ரஜினி!

அஜித்தின் துணிவு படத்தின் முதல் பாடல் அப்டேட்டிற்க்காக ரசிகர் ஆவலுடன் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.