பில்லா படத்துக்கு முன்பே.. ரஜினியின் மற்றொரு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க விரும்பிய அஜித்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக அஜித் படங்கள் பற்றிய எந்த வித அறிவிப்பும் வராமல் இருந்த சூழலில், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனாலும், விடாமுயற்சி படம் பற்றி மற்ற எந்த தகவல்களும் வெளியாகாத போதிலும், வெளிநாட்டில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பின் BTS புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. மேலும் இந்த புகைப்படங்களின் மூலம், அஜித் குமாருடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருவதும் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

துணிவு படத்தில் வருவது போல, முழுக்க முழுக்க வெள்ளைத் தாடி மற்றும் முடியுடன் இந்த புகைப்படங்களில் அஜித் இருப்பதால், விடாமுயற்சி படத்திலும் இது போன்ற ஸ்டைலிஷான லுக்கில் தான் வருவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ஒரு பழைய படத்தை நடிகர் அஜித் குமார் ரீமேக் செய்ய விரும்பிய தகவல் பற்றி தற்போது காணலாம். நடிகர் அஜித் குமார் தற்போது ஸ்டைலிஷாக ஒரு ஹாலிவுட் ஹீரோ லுக்கில் இருப்பதற்கு அஸ்திவாரம் போட்ட திரைப்படம் என்றால் நிச்சயம் பில்லாவை சொல்லலாம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ரஜினி மற்றும் ஸ்ரீ ப்ரியா உள்ளிட்டோர் நடித்த பில்லா படத்தின் ரீமேக்காகும்.

அஜித் நடித்த பில்லா படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் கோட் ஷூட் போட்டுக் கொண்டு நடிகர் அஜித் நடந்து வரும் ஒவ்வொரு காட்சிகளும் அந்த அளவுக்கு அட்டகாசமாக இருக்கும். இதில் அஜித்துடன் இணைந்து நடித்த நயன்தாரா, நமீதா, பிரபு என அனைவரும் நடிப்பில் அசத்த யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஆகியவற்றுடன் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது.

இதற்கு முன்பாக தோல்வியில் துவண்டு போன அஜித்திற்கு விஷ்ணுவர்தனின் பில்லா படம் கச்சிதமான கம்பேக் படமாக அமைந்திருந்தது. ரஜினியின் பில்லா ரீமேக்கில் அஜித் விருப்பத்துடன் நடித்திருந்த சூழலில், அதற்கு முன்பே மற்றொரு ரஜினி படத்தில் அவர் நடிக்க விருப்பம் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது. ரஜினிகாந்த், சுமன் மற்றும் ஸ்ரீப்ரியா ஆகியோர் இணைந்து நடித்து பெரிய ஹிட்டான தீ திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க அஜித் விரும்பியதாகவும், ஆனால் சில காரணங்களால் அது கைகூடாமல் போனதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.