வெறித்தனமாக வெளியான அஜீத் பட டைட்டில்.. ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் கொடுத்த AK

இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க அஜீத் விடாமுயற்சி படப்பிடிப்பையே இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்குப் பின் அஜீத்தின் அடுத்த படத்தினை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இயக்குநர் மகிழ்திருமேணி அந்த வாய்ப்பினைப் பெற்றார். தற்போது மும்முரமாக விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அஜீத்தின் சக திரைப் போட்டியாளரான விஜய் வாரிசு படத்தினை அடுத்து லியோ படத்தில் ஒரு வெற்றியைக் கொடுத்து விட்டு அதன்பின் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் THE GOAT படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தையும் முடித்து விட்டு மொத்தமாக சினிமாவிலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.

குணத்தால் உயர்ந்த எஸ்.எஸ்.வாசன்.. தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

ரஜினியும் அடுத்தடுத்து வேட்டையன், தலைவர் 171, ஜெயிலர் 2 என சீரியஸாக நடித்துக் கொண்டு வருகிறார். உலக நாயகனும் இந்தியன் 2, 3, தக் ஃலைப் என வரிசையாக படங்களைக் கைவசம் வைத்திருக்க அஜீத் ரசிகர்கள் சோர்ந்து போயினர். தங்கள் நாயகன் படம் எப்போது திரைக்கு வரும் அடுத்த படம் எப்போது என்ற கேள்விகளுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்திருக்கிறது.

விடா முயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜீத், மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார். ஏற்கனவே இவர் அஜீத்தைச் சந்தித்து கதை கூறிய நிலையில் தற்போது இந்தப் படத்தின் அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு குட், பேட், அக்லி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற 2025 பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அஜீத்தின் அடுத்த படத்திற்கான இந்த திடீர் அப்டேட்டால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் எனவும் அந்த அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நடிகர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே தலைப்பில் இத்தாலிய, மலையாளப் படங்களும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.