அஜித்துக்கு படப்பிடிப்பின்போது மீண்டும் காயம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்



தல அஜித் கடந்த சில வருடங்களில் படப்பிடிப்பின் போது பலமுறை காயமுற்றுள்ளார் என்பதும் அவருக்கு ஏற்கனவே பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ள நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக வெளிவந்துள்ள செய்திகள் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

நேற்று முன் தினம் நடந்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பில் பைக் சேஸிங் காட்சியில் அஜித் நடித்து கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் இதனால் அவருக்கு தோள்பட்டை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் சிறிய அளவில்தான் இருப்பதால் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் அடுத்த வாரம் கலந்துகொள்வார் என்றும் அதற்குள் அவர் முற்றிலும் குணமாகிவிடுவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Published by
Staff

Recent Posts