நான்காவது முறையாக இணையும் அஜித் – ஹெச் வினோத் கூட்டணி! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்துடன் மோதி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து அஜித்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி அதன் பின் அந்த படம் கைவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து சில மாதங்கள் இடைவேளைக்குப்பின் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித்தின் 62வது திரைப்படத்தின் அறிவிப்பு மிக பிரம்மாண்டமாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. அதில் அஜித் அடுத்ததாக மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தினாலும் அதன் பின் படத்தின் படப்பிடிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

கடந்த மாதம் ஐரோப்பிய நாடான அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன் பின் கடந்த மாத இறுதியில் இந்த படத்தின் படக்குழு சென்னை திரும்பி சிறிது கால ஓய்வுக்கு பின் இந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் அஜர்பைஜான் மற்றும் துபாய் நகரங்களில் நடக்க இருப்பதாக தகவல் வழியாக இருந்தது. இந்த இரண்டாவது ஷெட்யூல் தொடர்ந்து 70 நாட்களுக்கு மேல் நடத்த இருப்பதாகும் இத்துடன் விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தனது 63வது திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அடுத்தடுத்து இளம் இயக்குனர்களின் படங்களில் கமிட் ஆகி வரும் அஜித் தன் வெற்றி பயணத்தை தொடங்கியுள்ளார் என்று அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் ஹெச் வினோத் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமலஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் நடிகர் கமல் தற்பொழுது இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த தோல்வி… ஹீரோயினாக இல்லாமல் அக்கா கேரக்டரில் களமிறங்கும் நயன்தாரா!

இதனால் கமல் ஹெச் வினோத் கூட்டணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ஹெச் வினோத் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் 1 திரைப்படத்தை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்கத்தில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதற்கான முழு கதையையும் நடிகர் கார்த்தியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் நடிகர் கார்த்தி இந்த படத்திற்கு ஓகே சொல்லும் பட்சத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து ஏமாற்றங்களை சந்திக்கும் ஹெச் வினோத் கவனமாக இருக்கும் பட்சத்தில் நடிகர் கார்த்தியை தொடர்ந்து நடிகர் அஜித்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து நான்காவது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையில் இயக்குனர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. மீண்டும் இந்த கூட்டணி அமையும் பட்சத்தில் நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு அந்த படம் கொண்டாட்டமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.